Vidamuyarchi : அனிருத் இசைக்கு அஜித் வைப்... விடாமுயற்சி படத்தின் சவாடீக்கா பாடல் வெளியானது
vidamuyarchi first single : மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் த்ரிஷா நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் சவாடீக்கா லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது
விடாமுயற்சி
மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். . ஓம் பிரகாஷ் மற்றும் நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெற்று கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விடாமுயற்சி பாடல்
விடாமுயற்சி படத்தின் முதல் பாடலான சவாடீக்கா தற்போது வெளியாகியுள்ளது. ஃபோல்க் மார்லீ , அந்தோனி தாசன் சேர்ந்து பாடியுள்ளார்கள். விடாமுயற்சி டீசர் வெளியானபோது இது ரொம்ப சீரியஸான படமாக இருக்குமோ என்று ரசிகர்கள் நினைத்தார்கள் ஆனால் அஜித் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடும் விதமாக தற்போது வெளியாகியுள்ள சவாடீகா பாடல் அமைந்துள்ளது. கோட் சூட் அணிந்து அஜித் இந்த பாடலில் போடும் ஸ்டெப்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளன. பாடலில் மேலும் அனிருத் அந்தோனி தாசன் உள்ளிட்டவர்களும் இடம்பெற்றுள்ளார்கள்.
#Sawadeeka 🕺💃⚡️ https://t.co/Pm5XIZtP2L
— Anirudh Ravichander (@anirudhofficial) December 27, 2024
Happy New Year and love you all 🎉🎉🎉
Dearest AK sir #MagizhThirumeni @trishtrashers
Sung by @anthonydaasan 🎙️
Written by @Arivubeing ✍🏻
Choreography by @kayoas13 🕺#Vidaamuyarchi #EffortsNeverFail
@LycaProductions #Subaskaran…