Watch Video : அழகு நிலவே கதவு திறந்து... குழந்தையை வரவேற்க தயாராகும் ராஞ்சனா ஹீரோயின்..
பாண்ட்ஸ்டாண்ட் பாந்த்ராவில் உள்ள ராக்டேல் பங்களாவில் வருகிற ஜூலை 17-ஆம் தேதி பிரம்மாண்ட வளைக்காப்பு நடைபெறவுள்ளது.
சோனம் கபூர் :
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார்களாக வலம் வந்த அனில் கபூர் மற்றும் சுனிதா கபூரின் மகள் தான் சோனம் கபூர். வாரிசு நடிகையான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சாபரியா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவருக்கு பிலிம்பேர் நடிகைக்கான சிறந்த அறிமுக விருது கிடைத்தது. இதனையடுத்து பேட் மேன், சஞ்சு, ரான்ஜானா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இப்படி பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்த சோனம் கபூர், தொழிலதிபரான ஆனந்த அகுஜா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது சோனம் கபூர் நிறை மாத கர்பிணியாக உள்ளார். சமீபத்தில் அதை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டார்.
View this post on Instagram
பிரம்மாண்ட வளைகாப்பு :
அனில் கபூர் மற்றும் சுனிதா கபூர் தங்கள் மகள் சோனம் கபூருக்கு பிரமாண்டமாக வளைக்காப்பு நடத்தவுள்ளனர். இதில் குடும்ப நண்பர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த நெருக்கமானவர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.பாண்ட்ஸ்டாண்ட் பாந்த்ராவில் உள்ள ராக்டேல் பங்களாவில் வருகிற ஜூலை 17-ஆம் தேதி பிரம்மாண்ட வளைக்காப்பு நடைபெறவுள்ளது. இந்த பங்களா சோனம் கபூரின் அண்ணிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வளைக்காப்பிற்கான வேலைகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. விருந்தினர்களுக்கான பரிசுப்பொருட்கள் காரில் ஏற்றப்படும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
View this post on Instagram
ஜான்வி கபூர், குஷி கபூர், ஷனாயா கபூர், அன்ஷுலா கபூர், அர்ஜுன் கபூர் மற்றும் மோஹித் மர்வா போன்ற குடும்ப உறுப்பினர்களை தவிர ஸ்வாரா பாஸ்கர், கரீனா கபூர் கான், கரிஷ்மா கபூர், அம்ரிதா அரோரா, மலைகா அரோரா, ஆலியா பட், நடாஷா தல்லால், ஜாக், ஜாக், தீபிகா படுகோன், மசாபா குப்தா, ராணி முகர்ஜி ஆகியோரும் விழாவிற்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.