மேலும் அறிய
Advertisement
HBD Namitha : திரையில் புயலாக நுழைந்து அரசியல் கட்சிகளில் ஐக்கியம்.. நமீதா பிறந்தநாள் இன்று
HBD Namitha : தமிழ் சினிமாவில் ஒரு புயலாக கிளம்பி பின்னர் காணாமல்போன நடிகை நமீதா பிறந்தநாள் இன்று.
தமிழ் சினிமாவில் எத்தனையோ வேற்று மொழி நடிகைகள் என்ட்ரி கொடுத்து கலக்கியுள்ளனர். அந்த வரிசையில் சூறாவளியாக என்ட்ரி கொடுத்து பின்னர் மெல்ல மெல்ல அடங்கி போன நடிகைகளை ஒருவர் தான் நமீதா. தன்னுடைய வசீகரமான தோற்றம், வித்தியாசமான வசன உச்சரிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர்.
ஹாய் மச்சான்ஸ் என 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் ஃபயர் பற்றவைத்த கனவு கன்னி நமீதா பிறந்தநாள் இன்று. மச்சான்ஸை மிஸ் செய்யும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
2004ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'எங்கள் அண்ணா' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தமிழ் சினிமா நடிகைகளுக்கு மிகப்பெரிய டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதை தொடர்ந்து சத்யராஜ் ஜோடியாக நடித்த 'மகா நடிகன்', சரத்குமார் ஜோடியாக 'ஏய்', ஜீவன் ஜோடியாக 'நான் அவன் இல்லை' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருந்தார். சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு நடிகைக்காக ரசிகர்கள் திரையரங்குக்கு படை எடுத்தது நமீதாவுக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நமீதா தன்னுடைய உயரத்திற்கு ஏற்ற நடிகர்களாக தேர்வு செய்து நடிக்க வேண்டும் என திரைக்கதையை தேர்வு செய்வதில் கோட்டை விட்டு விட்டார். இருப்பினும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என அவருக்கு இருந்த தீராத தாகத்தை அஜித்துடன் 'பில்லா' படத்தில் நடித்ததன் மூலமும், விஜய்யின் 'அழகிய தமிழ் மகன்' படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்ததன் மூலம் நிறைவேற்றி கொண்டார்.
கிளாமர் ரோலில் நடித்து வந்த நமீதா உடல் எடை எகிற சினிமா வாய்ப்புகளும் குறைய துவங்கியது. வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு பயணித்த நமீதா, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான நடன நிகழ்ச்சியான 'மானாட மயிலாட' நிகழ்ச்சியின் நடுவரானார். அங்கும் அவரின் மச்சான் புராணம் சிறகடித்தது.
விஜய் டிவியில் பிரபலமான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய வித்தியாசமான கோணத்தை வெளிப்படுத்தினார். 28 நாட்கள் வரை தாக்குபிடித்த நமீதா பின்னர் வெளியேற்றப்பட்டார்.
சினிமாவில் இருந்து ஒதுங்கிய நமீதா தன்னுடைய காதலர் வீரேந்திர செளத்ரியை 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2022ம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அரசியல் களங்களில் இறங்கிய நமீதா பல அரசியல் பிரச்சாரங்களில் அதிரடியாக இறங்கி கண்டெண்ட்டாகவும் மாறி வருகிறார்
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் நடிகையாக வலம் வந்து ரசிகர்களை இதயங்களை கொள்ளை அடித்த நமீதா இன்று இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார். அவர் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பது தான் இந்த பிறந்தநாளுக்கு அவரிடம் ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion