நாட்டுக்கு ராஜானாலும் வீட்டுக்கு புருஷந்தான்..அஜித்தை கலாய்த்த எஸ்.ஜே.சூர்யா
நாட்டுக்கு ராஜானாலும் வீட்டுக்கு புருஷந்தான் என அஜித்தை பற்றி நடிகர் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது
அஜித் குமார்
துபாயில் நடைபெற்ற மிச்லின் 24H கார் பந்தையத்தில் நடிகர் அஜித் கலந்துகொண்டு முன்றாம் இடத்தை பிடித்துள்ளது ரசிகர்களுக்கு பெரியளவில் உற்சாகத்தை கொடுத்துள்ளது. துபாயில் நடைபெற்ற 24 மணி நேரம் போர்ஷி 991 கேடகரி கார் ரேஸில் அஜித்தின் அஜித் குமார் ரேஸிங் குழு கலந்துகொண்டது. இந்த போட்டியில் அஜித்தின் குழு மூன்றாவது இடத்தை பிடித்தது. இந்த வெற்றியை அஜித் மற்றும் அவரது குழுவினர் ரேஸ் களத்தில் கொண்டாடினர். நடிகர் அஜித் தேசிய கோடியை கையில் ஏந்தி கொண்டாடினார்.
நான் என்ன செய்யனும்னு சொல்ல தேவையில்ல
முன்னதாக ரேஸில் கலந்துகொண்டபோது அஜித்திடம் ஒருபக்கம் நடிப்பு இன்னொரு பக்கம் ரேஸ் என இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள். உங்கள் தயாரிப்பு நிறுவனம் கட்டுபாடுகள் விதிக்காதா என கேள்வி கேட்டபோது அஜித் இப்படி பதில் சொன்னார் " நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு யாரும் சொல்ல தேவையில்லை" தன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களை எப்போதும் சினிமாத் துறைக்காக அஜித் சமரசம் செய்துகொண்டது இல்லை. அவரது இந்த பதில் பலரையும் கவர்ந்தது.
ஷாலினிக்கு நன்றி
ரேஸ் முடிந்தபின் அஜித் தனது மனைவி ஷாலினிக்கு நன்றி தெரிவித்தபோது இப்படி கூறினார் " ஷாலு என்னை இந்த போட்டியில் கலந்துகொள்ள அனுமதித்தற்கு நன்றி"
ஒரு பக்கம் கம்பீரமாக இருக்கும் அஜித் மனைவி என்றதும் இப்படி அடக்கமாக பேசுகிறாரே அவரது ரசிகர்கள் மீம்ஸ் வெளியிட்டு வந்தார்கள். அற்போது அஜித் நடித்த வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா இது குறித்து தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அஜித் பற்றி எஸ்.ஜே சூர்யா
" இந்த ரேஸில் கலந்துகொள்ளாமல் அஜித் இன்னொரு படம் நாடித்திருந்தால் அவருக்கு 100 முதல் 150 கோடி சம்பளம் கிடைத்திருக்கும். ஆனால் ரேஸின் மீது அவருக்கு இருக்கும் பிரியம் அப்படியானது. எனக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்த நடிகர் , என்னுடைய நண்பர் நாட்டிற்கே பெருமை சேர்க்கும் விதமாக வெற்றிபெற்றதில் எனக்கு மகிழ்ச்சிதான். என்னதான் நாட்டிற்கே ராஜா என்றாலும் விட்டிற்கு புருஷன் தான். மனைவி ஷாலினியிடம் அவர் அனுமதி கேட்டுதான் ஆகனும்." என எஸ்.ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.