‛திருந்த நினைத்தாலும்... திருந்த விடமாட்டேன் என்கிறார்கள்’ செக் மோசடிகள் குறித்து பவர் ஸ்டார் பகீர் பேட்டி!
Power Star Srinivasan : ‛‛நானெல்லாம் வினாடியில் கோடி பார்ப்பேன். ஆனால், உழைத்து சம்பாதித்து பேமென்ட் கேட்டா இப்படி பண்றாங்க’’
பவர் ஸ்டார் சீனிவாசன் என்று பெயர் சொன்னாலே சிரிப்பு வந்துவிடும். அப்படிப்பட்ட காமெடி நடிகர் அவர். ஆனால் திரைக்கு வெளியில் செக் பவுன்ஸ், மிரட்டல் எனப் பலப் புகார்களில் சிக்கியிருக்கிறார்.
லத்திகா என்ற படம் மூலமாக 2011ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். சொந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமானதால் பவர் ஸ்டாரை கலாய்க்காதவர்களே கிடையாது.
ஆனால் எத்தனை முறை எப்படிக் கலாய்த்தாலும் அதை ரசித்து திரும்ப காமெடியாக்கிவிடுவார் பவர் ஸ்டார். அதுதான் அவரின் பவர் என்று கூட சொல்லலாம். 2013 ஜனவரி 13 இல் நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடித்தார்.
அவர் அளித்த பேட்டி ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது:
நான் பல பேருக்கு தொப்பி போட்டிருக்கேன். ஆனால் எனக்கே தொப்பி வைக்க சிலர் முயற்சி பண்ணாங்க. ஒரு முறை என்னை புது இயக்குநர் ஒரு படத்திற்கு புக் செய்தார். நான் பேமென்ட் பற்றி கேட்டேன். உடனே செக் கொடுத்தார்கள். நான் கொடுக்காத செக்கா என்று கேட்டேன். இல்லை சார் பாஸ் ஆகிடும்னு சொன்னாங்க. ஒரு வாரத்தில் பாஸ் ஆச்சு. கொடைக்கானல் சூட்டிங் கூட்டிட்டு போனாங்க. ஒரு வாரம் சரியான வேலை. அப்புறம் மீதி பேமென்ட் கேட்டேன். ஆனால், அதுவும் செக் என்றார்கள். பாஸ், செக் கதையே வேண்டாம் என்று சொன்னேன்.
எனக்கே தொப்பி போட பார்க்கும் போது தான் மனசு ஈஸியா காசு பாக்கச் சொல்லுது. நானெல்லாம் விநாடியில் கோடி பார்ப்பேன். ஆனால், உழைத்து சம்பாதித்து பேமென்ட் கேட்டா இப்படி பண்றாங்க. நான் எல்லாரையும் சொல்லவில்லை. சில புதுமுக இயக்குநர்கள் இப்படிச் செய்கிறார்கள் எனக் கூறுகிறேன். அவர்கள் இப்படிச் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நானே திருந்தி வாழ விரும்பினாலும் என்னைத் திருந்த விடமாட்டேன் என்கிறார்களே. நான் பலருக்கும் தொப்பி போடுவேன் பாஸ். எனக்கு தொப்பி போட ட்ரை பண்ணாதீர்கள். இளம் இயக்குநர்கள் நேர்மையாக இருக்க வேண்டும். இவ்வாறு பவர் ஸ்டார் சீனிவாசன் பேசியிருக்கிறார்.
உனக்காக ஒரு கவிதை, மண்டபம், நீதானா அவன், லத்திக்கா, ஆனந்த தொல்லை, நானே வருவேன். கண்ணா லட்டு தின்ன ஆசையா ஐ, யா யா, அழகன் அழகி. சும்மா நச்சின்னு இருக்கு, கோலி சோடா உள்ளிட்ட பல படங்களில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்