புதிய படம்.. பூஜை.. ஆரி அர்ஜுனன் கொடுத்த அப்டேட்..
ஆரி அர்ஜுனன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது.
நடிகர் ஆரி அர்ஜுன் 2010ஆம் ஆண்டு ரெட்டச்சுழி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த நெடுஞ்சாலை திரைப்படம் மூலம் பரவலான கவனத்தை பெற்றது. ஆனால் அவரை பட்டித்தொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்த்தது தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்ட அவர் பலரது உள்ளங்களை கவர்ந்து வெற்றியாளரானார்.
இதனையடுத்து அவர் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் கவனம் செலுத்திவருகிறார். அதுமட்டுமின்றி ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு சமீபத்தில் ஆரி அர்ஜுன் ஒரு லட்சம் ரூபாய் அளித்திருந்தார்.
பிக்பாஸ் நான்காவது சீசனுக்கு பிறகு ஆரிக்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் அவருக்கு பெரிதாக வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆரி அர்ஜுன் தற்போது புது படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். எஸ்.ஏ.எஸ் (S.A.S) புரொடக்ஷன் எஸ்.ஏ.எஸ். யோகராஜ் வழங்க "கண்மணி பாப்பா" திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீமணி என்கிற பி. அஸ்வின் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் ஆரி வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தப் படத்திற்கான பூஜை நேற்று எளிமையாக நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படத்தில் ஆரியுடன் பிரபலமான நடிகர்கள், நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். இவர்களை பற்றிய விவரம் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பட்டியலை விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Spider Man: ரஜினி இல்லை... அஜித் இல்லை... விஜய் இல்லை... அதிகாலையில் தியேட்டரை அதிரவிட்ட ஸ்பைடர் மேன்!
Watch Video | அதகளமான Fun மொமெண்ட்ஸ்.. தனிவிமானத்தில் மும்பை பறந்தது புஷ்பா படக்குழு
குடும்பம்.. அவமானம்.. சமந்தாவை மறைமுகமாக தாக்குகிறாரா நாக சைதன்யா..??
‛எனக்கும் ப்ரியங்காவுக்கும் இது தான் பிரச்சனை...’ போட்டு உடைத்த இமான் அண்ணாச்சி!
watch video | கேராளாவிற்கு விசிட் அடித்த சூர்யா-ஜோதிகா! வைரலாகும் வீடியோ!