Watch Video | அதகளமான Fun மொமெண்ட்ஸ்.. தனிவிமானத்தில் மும்பை பறந்தது புஷ்பா படக்குழு
நடிகை ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் தனி விமானம் மூலம் கேரளாவின் கொச்சியிலிருந்து மும்பைக்கு சென்றனர்.
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புஷ்பா படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருக்கிறார். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மட்டுமின்றி ஃபஹத் பாசில் உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருக்கின்றனர்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் நாளை வெளியாக இருக்கிறது. படத்தில் இடம்பெற்ற சாமி, ”ஊ சொல்றியா மாமா” ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. பாடல்கள் மூலம் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. ஐந்து மொழிகளில் படம் வெளியாவதால் அந்தந்த மொழியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தவருகிறது. அந்தவகையில் புஷ்பா படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய அல்லு அர்ஜுன், “நான் பிறந்து வளர்ந்தது சென்னையில்தான். என் படத்தை தமிழ் ரசிகர்கள் பார்த்தால் பெருமிதம் கொள்வேன். என்னிடம் என் நண்பர்கள், ‘நீ தமிழ் பேசும்’ தெலுங்கு பையன் என்று சொல்வார்கள் என கூறினார். அவரது இந்தப் பேச்சு வைரலானது.
What Crazy Fun it was on d Flight frm KOCHI to MUMBAI for #PushpaMumbaiPressMeet
— DEVI SRI PRASAD (@ThisIsDSP) December 16, 2021
with PUSHPA @alluarjun & SRIVALLI @iamRashmika 😀😀😍😍😄🤣🤣
Havent laughed like this in recent times😀
ThankU @Bobbyallu 4 these lovely memorable pics🤗@GTelefilms @MythriOfficial @aryasukku pic.twitter.com/9CndDGiyrg
இந்நிலையில், மும்பையில் நடக்கவிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்புக்காக அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் தனி விமானம் மூலம் கேரளாவின் கொச்சியிலிருந்து மும்பைக்கு சென்றனர். இந்தப் புகைப்படத்தை தேவிஸ்ரீ பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்