Madurai corporation election 2022 | மதுரையில் பிரச்சாரத்திற்கு சென்ற பிரேமலதா... விஜயகாந்த் சொல்லிக்கொடுத்த அந்த வார்த்தை...!
தேர்தல் வந்ததால் தான் மகளிர் உரிமை தொகையை தருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மீண்டும் ஏமாற்றினால் தமிழகத்தில் எங்கும் வரவே முடியாது” என பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதனால் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் இறுதியாக 12 ஆயிரத்தி 607 பதவியிடங்களுக்கு 57 ஆயிரத்தி 778 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளார்கள் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.
100 வார்டுகளை கொண்ட மதுரையில் கடந்த சில நாட்களாக பிரச்சாரம் தூள் கிளம்பியது. சீமான், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., கமலஹாசன், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை என பலரும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடைசி நாளான இன்று மதுரை தே.மு.தி.க சார்பாக பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ”தேர்தல் வந்ததால் தான் மகளிர் உரிமை தொகையை தருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மீண்டும் ஏமாற்றினால் தமிழகத்தில் எங்கும் வரவே முடியாது” என பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.