Madurai corporation election 2022 | "சொன்னதை செய்யலைன்னா இரண்டே ஆண்டில் ராஜினாமா” - பாஜக வேட்பாளர் வாக்குறுதி
2 ஆண்டுகளில் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா செய்கிறேன் என பாஜக வேட்பாளர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
2 ஆண்டுகளில் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா செய்கிறேன் என பாஜக வேட்பாளர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் இறுதியாக 12 ஆயிரத்தி 607 பதவியிடங்களுக்கு 57 ஆயிரத்தி 778 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளார்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
#abpnadu சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சி 5வது வார்டில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஒருவர் தான் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன், தவறும் பட்சத்தில் தானாகவே ராஜினாமா செய்துகொள்வதாக அதிரடி முடிவை எடுத்துள்ளார்.#Abpnadu | #election @shameesugui . pic.twitter.com/j6QT0ExoDR
— Arunchinna (@iamarunchinna) February 17, 2022