கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறு நியமனம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் ஓய்வுபெறும் நிலையில் உள்ள பேராசிரியர்களுக்கு அடுத்த ஆண்டு மே 31 வரை மறுநியமனம் நீட்டித்து உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்வி ஆண்டின் இடையில் பேராசிரியர் பணி ஓய்வு பெற்று செல்லும்போது, மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என்பதால் கல்வி ஆண்டின் இறுதியில் ஓய்வு அளிக்கும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறு நியமனம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அரசு / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓர் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் நிலை எழும் பொழுது மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால், அவ்வாசிரியர்களை வயது முதிர்வு மாதம் ஒய்வு பெற அனுமதித்து மீண்டும் அக்கல்வி ஆண்டின் இறுதி வரை மறு நியமனம் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
ALSO READ | Mens Day 2024 Wishes: சர்வதேச ஆண்கள் தினம்; அன்பிற்குரிய ஆண்களுக்கு வாழ்த்து அனுப்ப மெசேஜ்!
இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான பாட வகுப்புகள் ஏப்ரல் முதல் வாரத்துடன் முடிவடைந்து விடுவதாலும், மே மாதத்தில் தேர்வுகள் / விடைத்தாள் திருத்தும் பணிகள் மட்டுமே நடைபெறுவதாலும், கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை மறுநியமனம் வழங்கி ஆணையிடப்பட்டது.
மே மாதம் வரை மறு நியமனம் நீட்டிப்பு
முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு, நிர்வாக பதவிகளான கல்லூரி கல்வி இணை இயக்குநர் / மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் / கல்லூரி முதல்வர் மற்றும் இதர கல்விசார் பணியாளர்களான கல்லூரி நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகள், நீங்கலாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 2025 மே மாதம் 31 வரை மறுநியமனம் நீட்டித்து உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.