உங்கள் குழந்தை சூப்பரா படிக்கணுமா? அப்ப இத பாலோ பண்ணலாம் வாங்க!

Published by: விஜய் ராஜேந்திரன்

குழந்தைகளுக்கு அன்றாட பணிகளை செய்வதற்கு முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும்

எப்பாது பள்ளிக்குச் செல்ல வேண்டும்? எப்போது விளையாட வேண்டும்? என்பது குறித்து நேரத்துடன் அட்டவணையை உருவாக்க வேண்டும்

குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு முன்னதாக அவர்களுக்கென்று தனி இடம் ஒதுக்கிக் கொடுக்கவும்

தனி இடம் அல்லது அறை இல்லையென்றாலும் இருக்கின்ற இடத்தில் அமைதியான சூழலை உருவாக்கிக் கொடுக்கவும்

நல்ல வெளிச்சம் மற்றும் காற்றோடமான இடமாக இருந்தால் அசௌரியமான சூழலை அனுபவிக்க மாட்டார்கள்

புத்தகத்தைப் படி, வீட்டுப்பாடங்களை எழுது என்று வற்புறுத்தவேண்டாம்

உரையாடல்கள் மற்றும் கதைகள் மூலமாக குழந்தைகளுக்கு படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்

விளையாட்டுத்தனமாக கற்றுக் கொடுக்கும் போது எதையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் குழந்தைகளுக்கு ஏற்படும்

வாசிப்புத்திறனை அதிகப்படுத்த அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களைப் படிக்க அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கவும்