Mens Day 2024 Wishes: சர்வதேச ஆண்கள் தினம்; அன்பிற்குரிய ஆண்களுக்கு வாழ்த்து அனுப்ப மெசேஜ்!
Happy Mens Day 2024 Wishes in Tamil: சர்வதேச ஆண்கள் தினம் வரலாறு, வாழ்த்து மெசேஜ் பற்றி இங்கே காணலாம்.
International Men's Day 2024: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆண்களின் உடல்நலன் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், சமூக பொருளாதார மாற்றங்களில் ஆண்களின் பங்கு அதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ‘சர்வதேச ஆண்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது.
வரலாறு என்ன சொல்கிறது?
1992-ம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி தாமஸ் ஓஸ்டர் என்பவரால் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டதாக சொல்லப்படுகிறது. அது சர்வதேச அளவில் கவனம் பெறவில்லை.
அதற்குபிறகு, 1999-ல் University of the West Indies in Trinidad and Tobago வில் வரலாற்று பேராசிரியர் ஜெரோமி டீலக்சிங் (Dr. Jerome Teelucksingh) என்பர் முதன் முதலில் ‘ஆண்கள் தினம்’ கொண்டாட முன்னெடுப்பு எடுத்தார் என International Men's Day வலைதளத்தில் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் ‘சர்வதேச ஆண்கள் தின’த்தை வழக்கறிஞர் உமா செல்லா என்பவர் பிரபலப்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தவர். உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் நவம்பர் 19-ம் தேதி ‘சர்வதேச ஆண்கள் தினம்’ கொண்டாடப்படு வருகிறது.
முக்கியத்துவம் என்ன?
சமூக பொருளாதார, கலாச்சார வேறுபாடுகளின்றி ஆண், பெண் இருவரும் சக உயிராக பூமியில் மகிழ்ச்சியாக வாழ்வதை பலரும் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களின் உரிமைகளை பாதுகாப்பது, ஆண்களின் நலன் சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய விசயங்கள், ஆண்களின் பங்களிப்பை பாராட்டுவது, அவர்களின் இயல்பை கொண்டாடுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டதே ‘சர்வதேச ஆண்கள் தினம்.’
அதோடு மட்டுமல்லாமல், ஆண்களின் உடல்நலன், மனநலம், பணியிடம், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஆகியவை கவனிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டியது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இந்த நாளின் நோக்கம் ஆகும். பாலின சமத்துவத்தை உறுதி செய்வதும் இதில் அடங்கும்.
சமூகம், குடும்பம் என ஆண்களின் பங்களிப்புகளிப்பினைக் கொண்டாடுவது, ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி பேசுவது அது குறித்து விழிப்புணர்வை உருவாக்கி பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது ஆகிய நோக்கங்களை அடிப்படையாக் கொண்டு சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.ஆண்கள் தினம் பெண்கள் தினத்துக்கு போட்டியாக கொண்டாடப்படுவதற்காக உருவாக்கப்பட்டதில்லை என என்பது சர்வதேச ஆண்கள் தினம் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்ன பரிசு வழங்கலாம்?
- அப்பா, அண்ணன், தம்பி, நண்பர், கணவர், மகன்,தாத்தா, சித்தப்பா, மாமா என வாழ்வில் முக்கியத்துவம் வகிக்கும் ஆண்களுக்கு அவர்கள் மனதுக்குப் பிடித்த பரிசுகளை வழங்கலாம்.
- அன்பிற்குரியர்களின் மனநலன், உடல் ஆரோக்கியம் குறித்து உரையாடலை முன்னெடுக்கலாம்.
- அவர்களுக்குப் பிடித்த உணவு சமைத்து கொடுப்பது, ஸ்பா, ஹெர்கேட் டே, வாட்ச், ஆடை, புத்தகம், கேமிங் டிவைஸ், என உங்களுக்கு தோன்றுவதை பரிசளிக்கலாம்.
- அவர்களுடன் நேரம் செலவிட்டு மனம்விட்டு உரையாடலாம்.
- அவர்கள் உங்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை கடிதம் எழுதி வெளிப்படுத்தலாம்.
- அவர்களின் இயல்பை புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்; அவர்களின் இயல்பின் அழகை ஏற்றுக்கொள்ள பழகலாம்.
வாழ்த்து மெசேஜ்:
- வாழ்வில் கடினமான சூழல்களை எதிர்த்து போராடும், உழைக்கும் உங்களின் காலம் விரைவில் சரியாகும். இந்த நாள் அதற்கான தொடக்கமாக அமையும். இனிய சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள்! மகிழ்ச்சியோடு உங்கள் நாள்களை கொண்டாட வாழ்த்துகள்.
- இந்த வாழ்வின் புரியாத புதிர்களை எதிர்கொள்வதற்கு உடன் இருந்து வழிநடத்தும், நேசத்துடன் கண்டித்து சூழல்களை சமாளிக்க கற்றுத் தரும் அப்பாவுக்கு வாழ்த்துகள்! நீ இருக்கும் வாழ்க்கை அழகாக இருக்கிறது! இனிய சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள்!
- நீ என் வாழ்வில் இன்றியமையதாக ஒருவராக இருப்பதை நினைத்து மகிழ்கிறேன். பிரபஞ்சத்திற்கு நன்றி! இனிய வாழ்த்துகள்
- சிறந்த மனிதனாக இருக்க முயற்சிப்பதை நினைத்து பெருமை கொள்கிறேன். இனிய வாழ்த்துகள்!
- இன்று உங்களின் உழைப்பை கொண்டாடுகிறோம். ஓவ்வொரு நாளும் அப்படியே! இனிய வாழ்த்துகள்!
- இந்த நாளில் உன் உரிமைக்காகவும் இயல்பை இழக்காமல் இருக்கவும் உறுதியோடு இருக்க வாழ்த்துகிறேன்.
- சிறந்த அப்பாவாக, அண்ணனாக, கணவனாக, மகனான இருப்பதை நினைத்து பெருமையோடு வாழ். இனிய வாழ்த்துகள்!
- உன் வாழ்க்கையில் நீ இன்னும் மிக சிறந்த மனிதாக 'Transformation'-ல் எப்போதுன் உடன் இருப்பேன். மகிழ்ச்சியோடு வாழ். இனிய வாழ்த்துகள்.
- உங்களின் உடல், மன ஆரோக்கியம் ரொம்பவே முக்கியமானது என்பதை உணர்ந்துகொள். இனிய வாழ்த்துகள்.