TNPSC Group 2: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? நாளையே கடைசி! பிற முக்கிய விவரம் இதோ!
TNPSC Group 2 Prelims Exam 2025: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசித் தேதி ஆகும்.

2025ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்தத் தேர்வுக்கு ஜூலை 15ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
இந்த நிலையில் விண்ணப்பிக்க நாளை (ஆகஸ்ட் 13ஆம் தேதி) இரவு 11.59 மணி கடைசித் தேதி ஆகும். அதேபோல, ஆகஸ்ட் 18ஆம் தேதி 12.01 மணி முதல் 20ஆம் தேதி 11.59 மணி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
இளங்கலை பட்டம் போதும்
இந்தத் தேர்வை எழுத ஒவ்வொரு பதவிக்கும் வெவ்வேறு விதமான கல்வித் தகுதி கூறப்பட்டு இருந்தாலும், பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. வனவர் உள்ளிட்ட சில பதவிகளுக்கு மட்டும் மருத்துவ மற்றும் உடல் தகுதி அவசியம் ஆகும்.
தேர்வு முறை எப்படி?
- முதல்நிலைத் தேர்வு
- முதன்மைத் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
இதில் முதன்மைத் தேர்வுகள் குரூப் 2 பணிகளுக்கும் குரூப் 2 ஏ பணிகளுக்கும் தனித்தனியாக நடைபெறும்.
இந்த 2 தேர்வுகளோடு வனவர் பணிக்கு, நடைச் சோதனை கூடுதலாக நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
வயது வரம்பு
அனைத்து வகையான பதவிகளுக்கும் உச்ச வயது 32 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் சமூக வாரியாக வயது வரம்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நன்னடத்தை அலுவலர் பதவிக்கு மட்டும் 42 வயது வரை விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பக் கட்டணம்
கட்டண விலக்கு கோராத தேர்வர்கள், முதல்நிலைத் தேர்வுக்கு ரூ.100-ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதேபோல முதன்மைத் தேர்வுக்கு 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம்.
தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவும் யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
- தேர்வர்கள் ஒரு முறை பதிவை முடித்தபிறகே டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
- முதலில், https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ%3D%3D என்ற இணைப்பை தேர்வர்கள் க்ளிக் செய்ய வேண்டும்.
- அதில் தேர்வர் பெயர், இ மெயில் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட போதிய விவரங்களை உள்ளிட வேண்டும்.
- விண்ணப்பிக்கக் கட்டணத்தைச் செலுத்தி, ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
முழு விவரங்களுக்கு: https://tnpsc.gov.in/Document/tamil/GRP2_11_2025_TAMIL.pdf என்ற அறிவிக்கையை முழுமையாகப் படித்து அறிந்து கொள்ளலாம். இதிலேயே பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் விரிவாகக் கொடுக்கப்பட்டு உள்ளன. https://tnpsc.gov.in/Document/english/GRP2_11_2025_ENGLISH.pdf என்ற இணைப்பில் ஆங்கிலத்தில் அறிவிக்கை வெளியாகி உள்ளது.
மாநிலம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள சார்பதிவாளர், இளநிலை உதவியாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு உதவியாளர், வனவர், முதுநிலை உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு காலி இடங்களை நிரப்ப, குரூப் 2, 2 ஏ தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மொத்தம் 645 இடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/























