மேலும் அறிய

Upendra: தேவர் மகன் முதல் காஞ்சனா வரை.. இந்த படம் எல்லாம் உபேந்திரா நடிச்ச படமா?

கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள உபேந்திரா தேவர் மகன், வசூல்ராஜா எம்பிபிஎஸ், பிதாமகன் உள்ளிட்ட தமிழின் பல வெற்றிப் படங்களில் ரீமேக்கில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கூலி. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் தமிழ் நடிகர் சத்யராஜ் மட்டுமில்லாமல் இந்தி நடிகர் அமீர்கான், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் செளபின் சாஹிர் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களில் உபேந்திரா மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

கன்னட திரையுலகில் மிகவும் முக்கியமான நடிகர் உபேந்திரா. நடிகராக மட்டுமின்றி இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவர் உபேந்திரா. பல சவாலான கதாபாத்திரங்களை சவாலாக எடுத்து நடிக்கும் திறன் கொண்டவர். தமிழ் சினிமாவின் பல சவாலான படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்து நடித்துள்ளார்.

வசூல் ராஜா எம்பிபிஎஸ்:

இந்தியில் வெளியான படம் முன்னாபாய் எம்பிபிஎஸ். இந்த படம் தமிழில் வசூல் ராஜா எம்பிபிஎஸ் என்று கமல் நடித்து வெளியாகி ஹிட் அடித்தது. இந்த படத்தை 2005ம் ஆண்டு கன்னடத்தில் உப்பிதாதா எம்பிபிஎஸ் என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு உபேந்திராவே வசனங்கள் எழுதினார். இந்த படத்தை ராஜேந்திர பாபு இயக்கினார்.

Upendra: தேவர் மகன் முதல் காஞ்சனா வரை.. இந்த படம் எல்லாம் உபேந்திரா நடிச்ச படமா?

கமல்ஹாசனின் திரைவாழ்வில் மிக மிக முக்கியமான திரைப்படமாக இருப்பது தேவர்மகன். இந்த படத்தை தண்டகே தக்க மகா என்ற பெயரில் ரீமேக் செய்து உபேந்திரா நடித்துள்ளார்.  மகேந்தர் இயக்கிய இந்த படம் அங்கு தோல்வி அடைந்தது. அம்ப்ரீஷ், உபேந்திரா, லைலா ஆகியோர் நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.

பிதாமகன்:

தமிழில் விக்ரம், சூர்யா இருவரும் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் பிதாமகன். பாலா இயக்கிய இந்த படத்தில் இவர்கள் இருவரது நடிப்பும் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவால் பாராட்டப்பட்டது. இந்த படத்தை அனதரு என்ற பெயரில் ரீமேக் செய்தார். இதில் விக்ரம் கதாபாத்திரத்தில் உபேந்திரா நடித்திருப்பார். சூர்யா கதாபாத்திரத்தில் தர்ஷன் நடித்திருப்பார்.

Upendra: தேவர் மகன் முதல் காஞ்சனா வரை.. இந்த படம் எல்லாம் உபேந்திரா நடிச்ச படமா?

வரலாறு:

Upendra: தேவர் மகன் முதல் காஞ்சனா வரை.. இந்த படம் எல்லாம் உபேந்திரா நடிச்ச படமா?

தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் 3 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் வரலாறு. இந்த படத்தில் அஜித்குமார் பெண்மை கலந்த பரதக் கலைஞராக நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் மிகவும் சவாலானதாக இருக்கும். அதேபோல, வில்லனாகவும் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரமும் மிகவும் சவாலானதாக இருக்கும். அஜித்தின் இந்த கதாபாத்திரங்களில் உபேந்திரா நடித்திருப்பார். 

காஞ்சனா:

Upendra: தேவர் மகன் முதல் காஞ்சனா வரை.. இந்த படம் எல்லாம் உபேந்திரா நடிச்ச படமா?

தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் காஞ்சனா. திருநங்கை கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் அசத்தலாக நடித்திருப்பார். ராகவா லாரன்ஸ் நடித்த இந்த கதாபாத்திரத்தில் உபேந்திரா நடித்திருப்பார். கல்பனா என்ற பெயரில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ராகவா லாரன்ஸ் இந்த படத்தை இயக்கினார்.

காஞ்சனா 2:

Upendra: தேவர் மகன் முதல் காஞ்சனா வரை.. இந்த படம் எல்லாம் உபேந்திரா நடிச்ச படமா?

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 2 படத்தையும் இவர் ரீமேக் செய்து நடித்திருப்பார். கல்பனா 2 என்ற பெயரில் இந்த படம் ரீமேக்காகி உபேந்திரா நடித்திருப்பார். அனந்தராஜு இந்த படத்தை இயக்கியிருப்பார். வசூல் ராஜா படம் தவிர மற்ற படங்கள் ஒவ்வொன்றும் சவாலான கதாபாத்திரங்களை கொண்டது. அதை சவாலாக எடுத்தே தான் நடித்ததாக உபேந்திரா ஒரு பேட்டியில் கூறியிருப்பார். மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற பல படங்களின் ரீமேக்கிலும் அவர் நடித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget