விழுப்புரம்: அண்ணா சிலை அவமதிப்பு - நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்ட பாஜகவினர்!
விழுப்புரம்: கண்டமங்கலத்தில் அண்ணா சிலை அவமதிப்பு வழக்கு - பாஜகவை சேர்ந்த 3 பேர் அதிரடி கைது, மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறை தனிப்படை தீவிரமாக தேடி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலை அமைந்துள்ளது. இந்த சிலை மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்தும் ஆ. ராசாவின் உருவப்படத்திற்கு செம்புள்ளி கரும்புள்ளி வைத்து அவரது உருவப்படத்துடன் அண்ணா சிலை மீது மாட்டி விட்டு அண்ணாவின் தலை பகுதியில் திமுக கட்சி கொடியை கொண்டு மூடிவிட்டு சென்றுள்ளனர்.
அதிகாலையில் அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து இருப்பதை கண்ட அப்பகுதியினர் கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தன் பேரில் விரைந்து சென்ற போலீசார் அண்ணா சிலை மீது இருந்த செருப்பு மாலையையும் ஆ.ராசாவின் புகைப்படத்தினை அகற்றினர். இதனை தொடர்ந்து கண்டமங்கலம் போலீசார் அண்ணா சிலையை அவமதிக்கும் விதமாக செருப்பு மாலை அணிவித்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டிவனம் காவல்நிலைய போலீசார் கண்டமங்கலம் ஒன்றிய பாஜக தலைவர் பிரகலாதன் உட்பட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விழுப்புரம்: அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த மர்ம நபர்கள்https://t.co/wupaoCQKa2 | #Anna #DMK @mkstalin @EPSTamilNadu pic.twitter.com/i9b9vf6t55
— ABP Nadu (@abpnadu) September 26, 2022
இந்தநிலையில், போலீசார் விசாரணைக்கு பின் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆகாஷ், அப்பு , வீரமணி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட யுவராஜ் , கணேஷ், கபில் ஆகிய மூன்று பேரையும் காவல்துறை தனிப்படை தீவிரமாக தேடி வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் விழுப்புரம் நீதித்துறை நீதிமன்றம் 2 நீதிபதி முன் நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயதும் இனி 60.. அமலுக்கு கொண்டுவந்த தமிழ்நாடு அரசு..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்