Crime: மதம் மாறி திருமணம்: இளம் ஜோடியை கழுத்து அறுத்து கொன்ற தந்தை...மும்பையில் பயங்கரம்!
மதம் மாறி திருமணம் செய்த இளம் தம்பதி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Crime: மதம் மாறி திருமணம் செய்த இளம் தம்பதி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் கரண் ரமேஷ் (22). இவர் மும்பையைச் சேர்ந்த குல்னாஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். வீட்டின் எதிர்ப்பை மீறி இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தனது மகள் வேறு மதத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்ததை தந்தை கோரா கானால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்கிடையில், காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி உத்தர பிரதேசத்தில் வசித்து வந்துள்ளனர்.
சமீபத்தில் பெண்ணின் தந்தை கோரா கானால், இவர்களை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இவர்களை மும்பைக்கு வர சொல்லி இருக்கிறார். இவர்களும் கடந்ந சில நாட்களுக்கு மும்பைக்கு வந்திருக்கின்றனர். தனது மகள் வேறு மதத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டதால், இவர்கள் கொலை செய்ய தந்தை கோரா கானால் திட்டமிட்டார். அதன்படி, தனது மகன் சல்மான் மற்றும் அவரது நண்பர் முகமது கான் ஆகியோருடன் சேர்ந்த மகள் குல்னாசையும், மருமகன் கரண் ரமேஷ் சந்திராவையும் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்.
பின்னர், மருமகன் கரண் ரமேஷ் சந்திராவின் உடலை மும்பை மான்கூர்டு பகுதியில் உள் கிணற்றில் வீசியிருக்கிறார். அதேபோல, மும்பை பன்வெல் பகுதியில் காட்டிற்குள் மகள் குல்னாஸ் உடலையும் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், கடந்த வாரம் அக்கம் பக்கத்தினர் இரண்டு பேரின் உடல்களை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். அப்போது, சந்தேகத்தின்பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை கோரா கானாலிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தனது மகள் மற்றும் மருமகனை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து, போலீசார் கொலை செய்யப்பட்ட பெண்ணின் ததை, சகோதரர் உள்பட 3 பேரை கைது செய்தனர். மதம் மாறி திருமணம் செய்த இளம் தம்பதி ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க