Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : தமிழகத்தில் அரசியல் ஊழல் இது எல்லாருக்கும் தெரிந்தது, பிரசாந் கிஷோர் பீகாரில் இருந்து வந்து நம்முடைய மாநிலத்தில் ஊழல் இருப்பது என சொல்ல தேவையில்லை

வாணியம்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் உள் கட்டமைப்பை மறுசீராய்வு செய்து திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைப்பெற்றது.
இதில் நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது
தமிழகத்தில் அரசியல் ஊழல் இது எல்லாருக்கும் தெரிந்தது, பிரசாந் கிஷோர் பீகாரில் இருந்து வந்து நம்முடைய மாநிலத்தில் ஊழல் இருப்பது என சொல்ல தேவையில்லை, ஊழலில் இருப்பது தெரிந்து என்ன இதுக்கு வந்து இங்கு வேலை செய்கிறாய் என ஆவேசமாக பேசினார், ஏய் உனக்கு தான் எங்களது ஊரில் ஊழல் இருக்கிறது என தெரியுது இல்ல எதுக்கு வர, ஊழல் செய்யுற அரசியல்வாதிகள் வெல்வதற்கு எதுக்கு வியூகம் வகிக்கிற, கேடுகெட்ட ஊழல்வாதி, ஊழல் இருக்கிற மாநிலத்தில் ஏன் வேலை செய்கிறாய் என்றார்.
இதையும் படிங்க: Train Service Cancel : அச்சச்சோ .. இரண்டு நாட்களுக்கு 16 ரயில்கள் ரத்தா... எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
அமித் ஷா குறித்து காட்டம்:
உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு மாநிலத்திற்கு செல்லும் போது பேசுவதுதான், நாட்டில் மத்திய அரசு ஆளுகின்ற மாநிலத்தில் எப்படி இருக்கிறது, மணிப்பூரில் எப்படி இருக்கிறது, அதற்கு பொறுப்பு எடுத்து வருந்திஇருக்கிறார்களா, பலமாதங்கள் தொடர்ச்சியாக கலவரம் நடந்தது, எத்தனை பெண்கள் பாலியல் வன்புணர்விற்கு உள்ளானாகி, கொலை செய்யப்பாட்டார்கள், 8 வயது ஆசிபா குழந்தை கொலைசெய்யப்பட்டதிற்கு வருத்தம் தெரிவித்தார்களா, இப்போது தமிழகத்திற்கு வந்து நாங்கள் , நேர்மையானவர்கள், புனிதமானவர்கள், என்று கூறுவார்கள்.
இதையும் படிங்க: Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
ஊழல் பத்தி பேசலாமா?
அதை ஊழலை நாங்கள் சரிசெய்துக்கொள்கிறோம், நீங்கள் ஆளும் பகுதியில் சரிசெய்யுங்கள், இங்கு எதையாவது பேசக்கூடாது, ஊழலை சரி செய்வதை நேர்மையானவர்கள் சொல்லவேண்டும், மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது, அமித்ஷா உள்ளாட்சி துறை அமைச்சர், ஆகியோர் உங்களது மாநிலத்தில், நடந்த கலவரத்தை யோசியுங்கள்.
தேவையென்றால் கூப்பிடுவீர்கள்:
அனைத்து கட்சி கூட்டம் உங்களுக்கு தேவையென்றால் கூப்பிடுவீர்கள், நாங்கள் வரனும், இத்தனை ஆண்டுகள் ,நடந்த கூட்டத்திற்கு ஏன் கூப்பிடவில்லை, அதே கோரிக்கையை வலியுறித்தி நாங்கள் தனியாக போராடுவோம், இவர்களை நம்பமுடியாது, பருவகால வியாபாரம் போன்று எலெக்ஷன் பிஸ்னஸ் செய்வார்கள், இப்போது தான் மும்மொழி கொள்கை வருகிறதா, இந்தி திணிப்பிற்கும், திமுகவிற்கும் என்ன சம்பந்தம், இந்தியை எதிர்த்து மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடினார்கள், ஒரு திமுக மாணவர் தான் தீக்குளித்து இறந்தார், அண்ணா விலகுகிறார் என்பதற்காக தான் அவர் தீக்குளித்தார், தமிழர்கள் தாய்மொழி மீதுள்ள பற்றால், தன்னெழுச்சியாக போராடினார்கள், இன்றைக்கு தேர்தல் வருவதால் பேசுகிறார்கள்,
புதியகல்விக்கொள்கையையும், காங்கிரசின் கொள்கையும் அதுதான், தமிழகம் அதை முழுமையாக ஏற்கிறது, அதை எதிர்கின்ற மாறி நடிக்கிறது, இல்லம்தேடி கல்வி என்ற வெவ்வேறு பெயர்களில் புதியகல்விக்கொள்கையை செயல்படுத்திவிட்டார்கள்இந்தியை எதிர்ப்பார்கள், தாய்மொழியை காப்பார்கள் நம்பிக்கை இருந்திருந்தால், நாங்கள் ஏன் இந்த வேலை செய்கிறோம், இந்த நாடகத்தை ரொம்பநாள் பார்த்துவிட்டு கிளம்பிவிட்டோம்.
பிரசாந்த் கிஷோர் மீது தாக்கு:
தமிழகத்தின் புதிய நம்பிக்கை விஜய் என பிரசாந் கிஷோர் சொன்னது இருக்கலாம், அதை பீகார் காரன் தான் வந்து கொடுத்த காசிற்கு கூவ வேண்டும், வேறு பேசுவோம் என்றார் சீமான்.

