மேலும் அறிய
ஆம்லெட் பிரச்னையால் மச்சானை போட்டு தள்ளிய பாசக்கார மாமன் - கல்பாக்கத்தில் பயங்கரம்
கல்பாக்கம் அருகே மதுபோதையில் ஆம்லெட்டுக்காக மைத்துனரை கொலை செய்த மாமன். கல்பாக்கம் போலீசார் விசாரணை
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டிணம் அருகே மைத்துனரை கொலை செய்த மாமனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்லெட் சாப்பிடுவதில் தகராறு
செங்கல்பட்டு (chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் உய்யாலிகுப்பம் இருளர் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் வயது 30 ( த.பெ ஏழுமலை ) என்பவரும் அவரது உறவினரான (மாமன்) புதுப்பட்டினம் உய்யாலிகுப்பம் இருளர் பகுதியைச் சேர்ந்த முருகன் ( வயது 32 ) , ஆகிய இருவரும் புதுப்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாருதி சுசுகி கார் ஷோரூம் அருகே, தாங்கள் வாங்கி வைத்திருந்த மதுவை குடித்துள்ளனர் . அப்போது இருவருக்கும் இடையே ஆம்லெட் சாப்பிடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
வழக்கு பதிவு செய்து விசாரணை
இந்நிலையில் குடி போதையில் இருந்த முருகன் ஆத்திரத்தில் செல்லப்பனை கட்டையால் தாக்கியதில், தலையில் பலத்த காயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கல்பாக்கம் போலீசார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர், செல்லப்பனை பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டார் என கூறியதை அடுத்து, உடலை கைப்பற்றிய கல்பாக்கம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முருகனை கைதுசெய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்த பொழுது, இருவரும் ஒன்றாக இணைந்து அடிக்கடி மது சாப்பிடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளனர். இருவருக்கிடையே அடிக்கடி சிறு சிறு சண்டைகளும் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தான் நேற்று நள்ளிரவு இருவரும், ஒன்றாக அமர்ந்து மது சாப்பிடும் பொழுது , இருவருக்கிடையே ஆம்லெட் சாப்பிடுவதில் தகராறு ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக மது போதையில் இந்த கொலை சம்பவம் நடந்தேறி இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர். ஆம்லெட்க்காக கொலை நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion