Varun Chakravarthy: வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
பிரபல கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி, தான் மிகப்பெரிய விஜய் ரசிகர் என கூறியுள்ளார்.. அது மட்டுமல்ல, விஜய்க்காக ஒரு விஷயத்தை செய்து வைத்துள்ளாராம். அது என்ன தெரியுமா.?

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி, தான் விஜய்யின் தீவிர ரசிகன் எனக் கூறியுள்ளார். அதோடு, அவருக்காக ஒரு விஷயத்தை செய்து வைத்து காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அப்படி என்ன செய்திருப்பார்.?
சாம்பியன்ஸ் கோப்பையில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி
நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை அளித்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி. தனது சுழலால் எதிரணியை சுழற்றி அடித்து, இந்தியாவிற்கு கோப்பையை பெற்றுத் தந்ததில் முக்கிய பங்காற்றினார் வருண். ஆரம்ப கட்டத்தில் பிளேயிங் 11-ல் இடம்பெறாத அவர், கடைசி 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாம்பியன் வீரர் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக களமிறங்கிய வருண், தானும் ஒரு சாம்பியன் வீரர் தான் என்பதை தனது சுழலால் நிரூபித்தார். ஓவர் நைட்டில் ஓபாமா ஆவது என்று சொல்வார்கள்.. அதுபோல், சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற அணியில் முக்கிய வீரராகி, புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார் வருண் சக்கரவர்த்தி.
“நான் தீவிர விஜய் ரசிகன்.. அவருக்காக கதைகள் எழுதி வைத்துள்ளேன்“
சாம்பியன்ஸ் கோப்பையை வென்று நாடு திரும்பிய வருண், தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக தயாராகி வருகிறார். இந்நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் மிகப்பெரிய விஜய் ரசிகன் என்று தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், விஜய்க்காக 3 கதைகளை எழுதி வைத்திருந்ததாகவும், ஆனால் விஜய் நடிப்பதை நிறுத்திவிட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். விஜய் நடித்த தலைவா படத்திற்கு பிறகு தான் டாட்டூ போட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் வருண்.
விஜய் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படம்தான் அவரது கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை முடித்த உடன், 2026 தேர்தலுக்கு தனது கட்சியை தயார்படத்தும் வேலைகளில் அவர் தீவிரமாக இறங்க உள்ளதாக தெரிகிறது. அதனால், அவர் மீண்டும் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.
அதனால், வருணின் ஆசை நிறைவேறுவதும் கஷ்டம்தான். வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண், அவரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என்ன பண்றது.? லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

