ஆடிட்டர்களும் வழக்கறிஞர்களும்தான் பயனடைவார்கள் : வருமான வரிச்சட்டம் குறித்து ப.சிதம்பரம்
வருமானவரிச் சட்டத்தை மாற்றவேண்டும், தற்போதைய ஆட்சியில் இந்தச் சட்டத்தால் ஆடிட்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மட்டுமே பயனடைவார்கள்.
2022ம் ஆண்டு பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்துவருகிறது. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட் மீதான விவாதத்தில் நேற்று முன்தினம் பேசினார். அதில் வருமான வரிச்சட்டம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அதுகுறித்துப் பேசுகையில், “வருமானவரிச் சட்டத்தை மாற்றவேண்டும், தற்போதைய ஆட்சியில் இந்தச் சட்டத்தால் ஆடிட்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மட்டுமே பயனடைவார்கள். ஆனால் வரிச் சுமையை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும், பணக்காரர்கள் அதிக வரி செலுத்த வேண்டும் ”என்று அவர் கூறினார்.
“தனியார் முதலீட்டாளர்கள் இந்திய அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தெரிகிறது,” என்று கூறிய காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
”பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஒரு கடினமான ஆண்டை நோக்கிச் செல்லும்போது அரசாங்கம் கவனிக்க வேண்டிய பகுதி இது. உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருப்பதால் முன்கூட்டியே எச்சரிகையுடன் தயாராக இருப்பது நல்லது. தற்போதைய ஆட்சியில் ஆடிட்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மட்டுமே பயனடைகிறார்கள். அதனால் வருமான வரிச் சட்டத்தை உடனடியாக மாற்ற வேண்டும். மத்திய அரசின் முன்மொழியப்பட்ட வரிக் கொள்கைகள் மற்றும் அதை நிர்வகிப்பதில் பெரிய அளவிலான சறுக்கல் ஏற்பட்டுள்ளது" என்பதை இந்த வருமானவரிச்சட்ட மசோதா சுட்டிக்காட்டுகிறது என்றார்.
மேலும், “மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் நேரடி வரி வளரவில்லை என்றால், மறைமுக வரி செலுத்தும் மக்களில் பெரும்பாலோர் வளர்ந்து வருகிறார்கள் என்று அர்த்தம். வரிச்சுமையை பகிர்ந்து கொண்டு பணக்காரர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டில் நாட்டின் 1 சதவிகிதப் பணக்கார வர்க்கம் வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பது ஒரு மோசமான போக்கு’’, இந்த வருமானவரி மசோதா மக்களவையில் ஒப்புதல் பெற்று மாநிலங்களவை ஒப்புதலுக்காக நகர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இந்த புதிய வரிவிதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள் குறித்து ப.சிதம்பரம் பாராட்டியும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1 பிப்ரவரி அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளம் இந்த பட்ஜெட் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது குறிப்பிடத்தக்கது. "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதிவிகதமாக கணக்கிப்பட்டுள்ளது. நாம் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவலில் நடுவில் இருக்கிறோம். இந்த நிதிநிலை அறிக்கை அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது. இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பாதையை நோக்கி உள்ளது. சுயசார்பு திட்டத்தின்கீழ் தொழில் துறையை ஊக்குவிக்கும் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சியின் அடிப்படையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று தொழில்துறை குறித்து முக்கியமாக அவர் சொன்னது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையேதான் தனியார் நிறுவனங்கள் குறித்த தனது கருத்தையும் ப.சிதம்பரம் தற்போது பதிவிட்டுள்ளார்.