Big Boot Space Scooters: கம்மி விலை.. அதிக இடவசதி கொண்ட ஸ்கூட்டர்கள், இந்தியாவின் டாப் மாடல்கள், முதலிடம் யாருக்கு?
Scooters With Largest Boot Space: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக இடவசதி கொண்ட ஸ்கூட்டர்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Scooters With Largest Boot Space: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக இடவசதி கொண்ட ஸ்கூட்டர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அதிக இடவசதி கொண்ட ஸ்கூட்டர்கள்:
நாட்டில் மின்சார இரு சக்கர வாகனங்களின் மீதான மக்களின் கவனம் சீராக வளர்ந்து வருகிறது. இதன் காரணமாகவே மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மிகப்பெரிய சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. இருப்பினும், மற்ற இ-ஸ்கூட்டர் நிறுவனங்களும் உள்ளன. அவை ஏராளமான பூட் ஸ்பேஸ் மற்றும் ரூ. 2 லட்சத்திற்கும் குறைவான வரம்பை வழங்குகின்றன. எதிர்காலத்தில் அதிக இடவசதியுடன் கூடிய மின்சார ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டால், உங்களுக்கான விருப்பங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அதிக இடவசதி கொண்ட ஸ்கூட்டர்கள்:
1. ரிவர் இண்டி :
ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர், 43 லிட்டர் இடவசதியுடன், இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே மிகப்பெரிய சேமிப்பு இடத்தைக் கொண்டுள்ளது. 4 KWh பேட்டரி பேக் மற்றும் 6.42 KW எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் பயணிக்கும். இதன் விலை ரூ.1.25 லட்சம் ஆகும்.
2. பஜாஜ் சேடக் 35 சீரிஸ்
பஜாஜ் சேடக் 35 சீரிஸ் மின்சார ஸ்கூட்டர் அண்மையில் இந்திய சந்தையில் அறிமுகமானது. 35 லிட்டர் இடவசதியுடன், வாகனத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 73 கிமீ ஆகும். இதன் மிட் வேரியண்டின் விலை ரூ.1.2 லட்சம் மற்றும் டாப்-எண்ட் வேரியண்ட் விலை ரூ.1.27 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 153 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம்
3. ஓலா எஸ்1 ப்ரோ ஜெனரல் 2
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த ஸ்கூட்டர் தினசரி லக்கேஜ் தேவைகளுக்கு ஏற்ற 34 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்குகிறது. இதன் விலை ரூ.1.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் முழு சார்ஜில் 195 கிமீ வரை செல்லும். அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும்.
4. ஏதர் ரிஸ்டா
அண்மையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்கூட்டர் 34 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது. குடும்ப ஸ்கூட்டராக சந்தைப்படுத்தப்படும் இதன் ஆரம்ப விலை ரூ.1.10 லட்சம். இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 159 கிமீ வரை செல்லும். அதிகபட்சமாக மணிக்கு 80கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.
5.TVS iQube
இந்த ஸ்கூட்டர் 32 லிட்டர் பூட் ஸ்பேஸுடன் வருகிறது. ரூ.94,000 (எக்ஸ்-ஷோரூம்) விலையில், முழு சார்ஜில் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்தில் பயணிக்கும்.