உகாண்டா மக்களை அச்சுறுத்தும் டிங்கா டிங்கா வைரஸ் உகாண்டா நாட்டில் டிங்கா டிங்கா வைரஸ் வேகமாக பரவி வருகிறது அதிக அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது உகாண்டாவில் டிபுக்யோ மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நடுக்கத்தால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டே இருக்கிறார்கள் இந்த பாதிப்பால் காய்ச்சலும், உடல் நடுக்கமும் ஏற்பட்டு எழுந்து நடக்கக்கூட கடினமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. காய்ச்சல் மற்றும் உடல் நடுக்கம் அதிகமாக இருப்பதால் நடனமாடுவது போன்ற தெரிகிறது. இந்த நோய் எப்படி வந்தது என்பதை இதுவரை அறிய முடியவில்லை. 1518ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் டான்சிங் பிளேக் எனப்படும் மர்ம நோயால் உடல் நடுங்கியே உயிரிழந்துள்ளனர் உகண்டாவிலும் டான்சிங் பிளேக்காக இருக்குமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே வாரத்தில் குணமடைந்து விடுவதாக தெரியவந்துள்ளது.