Rasipalan November 06: தனுசுக்கு சிந்தனை...துலாமுக்கு கவனம்... உங்கள் ராசிக்கான இன்றையப் பலன்கள் இவை தான்!
RasiPalan Today November 06:இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 06.11.2022
நல்ல நேரம்:
காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை
மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை
மதியம் 1.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை
இராகு:
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை:
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
வரவுக்கு மீறிய செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத இடத்திலிருந்து சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வரவு மேம்படும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். வியாபார பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் அமையும். காலதாமதம் குறையும் நாள்.
மிதுனம்
பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி மனம் மகிழ்வீர்கள். நுட்பமான சில பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். விவசாய பணிகளில் அரசு சார்ந்த உதவி கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
கடகம்
திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவுபெறும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்கள் ஏற்படும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆதரவு நிறைந்த நாள்.
சிம்மம்
விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
கன்னி
நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதிய இலக்கு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
துலாம்
உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழல் அமையும். வெளியூர் தொடர்பான பணிகளில் இருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கவனம் வேண்டிய நாள்.
விருச்சிகம்
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் அமையும். குழப்பம் அகலும் நாள்.
தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். பயணங்களின் மூலம் அலைச்சலும், புதுவிதமான அனுபவமும் உண்டாகும். பணிகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். வீட்டை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். சுப முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். சிந்தனைகள் மேம்படும் நாள்.
மகரம்
கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வியாபாரம் ரீதியான பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். ஆலய வழிபாட்டால் மனதிற்கு திருப்தி ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஒற்றுமை உண்டாகும். சோதனை குறையும் நாள்.
கும்பம்
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை மீதான ஆர்வம் அதிகரிக்கும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். அமைதி நிறைந்த நாள்.
மீனம்
எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். குடும்பத்தில் எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் அமையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களின் வழியில் புதிய அனுபவம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.