மேலும் அறிய

Rasipalan November 12: கும்பத்துக்கு அமைதி.. மகரத்துக்கு மாற்றம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!

RasiPalan Today November 12: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 12.11.2022

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மதியம் 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
 
இரவு 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

ரிஷபம்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அருள்தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்து கொள்ளவும். செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படுவது நல்லது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். சுகம் நிறைந்த நாள்.

மிதுனம்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

கடகம்

அரசு சார்ந்த உதவி சிலருக்கு சாதகமாக அமையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். நெருங்கியவர்களின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.

சிம்மம்

நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சமூக பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

கன்னி

அலுவலகத்தில் சக ஊழியர்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வர்த்தக பணிகளில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நிம்மதி நிறைந்த நாள்.

துலாம்

புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். கூட்டாளிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதால் லாபம் கிடைக்கும். சிரமம் குறையும் நாள்.

விருச்சிகம்

தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். மனதில் ஏற்பட்ட பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் சஞ்சலம் அதிகரிக்கும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். சிக்கல் நிறைந்த நாள்.

தனுசு

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். எண்ணிய இலக்கை அடைவீர்கள். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். வெளிநாடு தொடர்பான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பங்கு வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.

மகரம்

விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். வீடு மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.

கும்பம்

மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவும், புரிதலும் உண்டாகும். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். செய்கின்ற முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

மீனம்

குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் புதிய நம்பிக்கையை உண்டாக்கும். மனதில் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
Embed widget