மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்!
காவல்துறையின் கையை கட்டிப்போட்டிருப்பதால்தான் அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை” எனத் தெரிவித்தார்.
சீமான் வருண்குமார் பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “இரவு நேரத்தில் ரோந்துகள் அதிகரிக்க வேண்டும் என காவல்துறைக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். முதலமைச்சர் நிறைய வாகனங்கள் வாங்கி கொடுக்க வேண்டும். கிராமப்புரங்களுக்கு ரோந்து அதிகரிக்க வேண்டும். விவசாயத்தை நம்பி இருந்த குடும்பம் உயிரிழந்திருக்கிறது. அவர்களுக்கு ஏன் நிவாரணம் கொடுக்கவில்லை. இதை முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.
காவல்துறையின் கையை கட்டிப்போட்டிருப்பதால்தான் அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை” எனத் தெரிவித்தார்.
அப்போது ஐபிஎஸ் வருண்குமார் நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாத கட்சி என்று சொல்லியிருக்கிறாரே? அதுப்பற்றிய கருத்து என்ன என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை “ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் என்னுடன் ஒன்றாக பயிற்சி பெற்றவர். நாம் தமிழர் கட்சியின் சீமான் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவர். ஐபிஎஸ் அதிகாரி மீட்டிங்கில் பலத்தரப்பட்ட விஷயங்கள் பேசுவார்கள். நானும் பல மீட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறேன். அதில் பேசுவது தனிப்பட்ட கருத்தாக கூட இருக்கலாம். அது மாநில காவல்துறையின் கருத்தாக இருக்க முடியாது.
அரசியல் கட்சி தலைவராக பேச சீமானுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கு. நாம் தமிழர் ஒரு அரசியல் கட்சி. அவருடைய அரசியல் தமிழத்திற்கு தேவைப்படுகிறது. இதை பெரிதுபடுத்த வேண்டாம். அவர் சொன்ன கருத்து தமிழக காவல்துறையின் கருத்தாக இருக்க முடியாது. பாஜகவின் கருத்தும் கிடையாது.
அவரவர்கள் அவரவர் வேலையை பார்க்கட்டும் என்பது என்னுடைய கருத்து” எனத் தெரிவித்தார்.
மேலும், “நான் நிறைய தவறுகள் செய்திருக்கின்றேன். அதை சுட்டிக்காட்டும்போது ஏற்றுக்கொள்கிறேன். நான் பேசுவதுதான் சரி என்று இருக்க முடியாது. இருக்கக்கூடாது.
நிறைய நேரத்தில் ஊடக நண்பர்களும் சுட்டிக்காட்டி உள்ளீர்கள். அதையும் ஏற்றுக்கொண்டு மாற்றிக்கொள்ள பார்க்கிறேன். நல்ல விஷயம் செய்யும் போது பாராட்டுகிறீர்கள். அதையும் ஏற்றுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.