"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
சம்பிராதயத்திற்காக மழை தண்ணில நின்னு போட்டோ எடுக்கும் அரசியல்வாதி நான் அல்ல என அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்ளாமல் தவிர்த்தது குறித்து தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், "விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழத்தம் தரப்பட்டது. எனவே, அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவரின் மனது இங்குதான் இருக்கிறது" என கூறியுள்ளார்.
திமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய், "சம்பிராதயத்திற்காக மழை தண்ணில நின்னு போட்டோ எடுக்கும் அரசியல்வாதி அல்ல நான். மக்களோடு உணர்வுப்பூர்வமாக எப்போதும் நான் இருப்பேன்.
தவெக தலைவர் விஜய்யின் சரவெடி பேச்சு:
மக்களின் அடிப்படைப் பாதுகாப்பான சமூக நீதியைக் கொடுக்காமல், கூட்டணிக் கணக்குகளை மட்டுமே மனதில்வைத்து, இருமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாளத்தோடு முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்கள் சார்பாக நான் விடுக்கும் எச்சரிக்கை.
நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அத்தனையும் 2026இல் மக்களால் மைனஸ் செய்யப்படும்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெரியும்.
"திருமாவுக்கு பிரஷர்"
மணிப்பூரின் நிலைமை குறித்து இந்திய அரசு கண்டு கொள்ளவில்லை. அதேபோல, தமிழ்நாட்டில் வேங்கைவயல் சம்பவம் குறித்து சமூக நீதி பேசும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு ஒரு துரும்பை கூட எடுத்து போடவில்லை. வேங்கைவயல் நிலைமையைப் பார்த்தால் அம்பேத்கர் வெட்கப்படுவார்" என்றார்.
திருமாவளவன் குறித்து பேசிய விஜய், "விசிக தலைவர் திருமாவளவனால் இன்று வர முடியவில்லை. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டுக்கு கூட அவரால் வர முடியாது அளவுக்கு கூட்டணி அழுத்தம் இருப்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால், அவரின் மனது மொத்தமும் இந்த நிகழ்வில்தான் இருக்கிறது" என்றார்.
இந்த விழாவில் பேசிய விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “புத்தக வெளியீட்டு விழாவில் , அண்ணன் திருமாவளவன் இங்கு இல்லை; ஆனால், அவர் மனசாட்சி இங்குதான் இருக்கிறது; 2026 தேர்தலில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும்.
பிறப்பால் இனி முதலமைச்சர் தமிழ்நாட்டில் உருவாகக் கூடாது. தமிழ்நாட்டில் நடைபெறும் மன்னராட்சியை கேள்வி கேட்டால் என்னை சங்கி என்கிறார்கள்" என்றார்.
இதையும் படிக்க: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா? டென்சனில் திருமா?