Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி " ஸ்டாலின் ஐயா.. உதவுங்க Please"
கோடியில் ஒருவருக்கு வரும் வினோத நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை உயிர் பிழைக்க ஒரு மாதத்திற்குள் 16 கோடிக்கு ஊசி போட வேண்டும் என்பதால் பெற்றோருடன் சேர்ந்து உள்ளூர் வாசிகளும் நிதி திரட்டி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்ப்பட்ட காந்தி நகர் பகுதியை சேர்ந்த மதியழகன் சௌந்தர்யா தம்பதிக்கு வர்ணிகாஸ்ரீ என்கிற 5 மாத பெண் குழந்தை உள்ளது. வர்ணிககாஸ்ரீ க்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தலை நிக்காமல் கை கால் அசைவு இல்லாமல் இருந்துள்ளது.
இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை காண்பித்தனர். குழந்தையின் உடல் தசை பலவீனமாக இருக்கிறது என்றும் இந்த நோய் ( SMA Stage one) முதுகெலும்பு தசை நார் வலுவிழப்பு நோய். இதற்கான zolgensma injection(gene therapy) என்கிற ஊசி வெளிநாடுகளில் மட்டுமே கிடைக்கும். அதன் விலை 16 கோடி ரூபாய் இருக்கும். இந்த ஊசி மருந்தை ஒரு மாதத்திற்குள் செலுவில்லை என்றால் குழந்தை ஆறு மாதத்தில் இறந்து விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து செய்வதறியாது திகைத்த பெற்றோர்கள் இது குறித்து சோசியல் மீடியாவில் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். இதில் தங்கள் குழந்தை உயிர் பிழைக்க உதவுமாறும் தங்களால் முடிந்த பண உதவியை தங்களுக்கு செய்யும்படியும் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





















