மேலும் அறிய

நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!

இப்போது பட்டப் படிப்புகளுக்கும் மறைமுகமாக நுழைவுத் தேர்வுகளை திணிக்க நடவடிக்கைகள் எடுப்பது அநீதியானது. அவற்றை ஒருபோதும் ஏற்க முடியாது.

விரும்பிய படிப்பில் சேரும் திட்டம் என்ற பெயரில் நுழைவுத் தேர்வை திணிக்கும் முயற்சி நடைபெறுவதாகவும் சமூகநீதிக்கு எதிராக செயல்படக்கூடாது எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’கல்லூரிகளில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடத்தலாம், 12ஆம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவைப் படித்திருந்தாலும், நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் கல்லூரியில் விரும்பியப் பாடப் பிரிவில் சேரலாம் என்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள பல்கலைக்கழக மானியக் குழு திட்டமிட்டிருக்கிறது.

இந்த யோசனைகள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும்கூட, இதன் பின்னணியில் நுழைவுத்தேர்வைத் திணிக்கும் திட்டம்தான் முதன்மையாக இருப்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

டிச.23 கடைசி

புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் உயர்கல்வியில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர முடிவு செய்துள்ள பல்கலைக்கழக மானியக்குழு, அது குறித்து சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளை அறிவதற்காக வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் வரும் 23ஆம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது.

யுஜிசி முன்வைத்துள்ள யோசனைகள் என்ன?

12ஆம் வகுப்பில் ஒருவர் எந்த பாடப்பிரிவைப் படித்தாலும், நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், கல்லூரியில் அவர் விரும்பும் பாடப்பிரிவில் சேர முடியும்; ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இதுவரை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்த நிலையில் இனி இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படும்; பட்டப்படிப்பு படிப்பதற்கான கால அளவை மாணவர்களே குறைத்துக் கொள்ளவும், நீட்டித்துக் கொள்ளவும் முடியும் என்பதைத்தான் பல்கலைக்கழக மானியக் குழு மக்கள் முன் வைத்திருக்கும் புதிய யோசனைகளாகும்.

12ஆம் வகுப்பில் ஒரு பாடப்பிரிவை படித்தவர்கள் பட்டப்படிப்பில் வேறு பாடத்தை படிக்க வேண்டும் என்றால், அதற்கு நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் 12ஆம் வகுப்பில் படித்த படிப்பையே கல்லூரியிலும் படிக்க நுழைவுத்தேர்வு தேவையா? என்பது குறித்து வரைவு அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையிலா?

அதேநேரத்தில், ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் மாணவர் சேர்க்கை வாயிலாக சேர விரும்பும் மாணவர்கள் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்று கடந்த ஜூன் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் எந்த மாற்றமாக இருந்தாலும், அதனடிப்படையில் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று மானியக்குழு அதிகாரிகள் கூறுகின்றனர்.

பள்ளிக்கல்விக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய்விடும்

எனவே, பல்கலைக்கழக மானியக்குழு இப்போது அறிவித்திருக்கும் அனைத்து சீர்திருத்தங்களும் மாணவர்களை நுழைவுத் தேர்வு முறைக்கு கொண்டு வருவதற்கான தூண்டில்கள்தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நுழைவுத்தேர்வுகள் சமூக நீதிக்கு எதிரானவை என்பதால் அவற்றை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படியாக புதிய, புதிய வடிவங்களில் நுழைவுத்தேர்வுகள் திணிக்கப்பட்டால், தற்போது நடைமுறையில் உள்ள பள்ளிக்கல்விக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய்விடும். பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அனைத்து மாணவர்களும் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்கும் நிலை உருவாகி விடும். அது சமூக நீதிக்கு நன்மை செய்யாது.

நுழைவுத் தேர்வுகள் என்பது ஊரக, ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் நுழையாத் தேர்வு. ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் ஓர் அடி முன்னேறினால், இரு அடி பின்னேறுவதைப் போலத்தான் மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. நீட் தேர்வை அறிமுகம் செய்ததன் மூலம் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை மத்திய அரசு பறித்துக் கொண்டது.

அடுத்தகட்டமாக பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, இப்போது பட்டப் படிப்புகளுக்கும் மறைமுகமாக நுழைவுத் தேர்வுகளை திணிக்க நடவடிக்கைகள் எடுப்பது அநீதியானது. அவற்றை ஒருபோதும் ஏற்க முடியாது.

நுழைவுத்தேர்வை திணிப்பதா?

12ஆம் வகுப்பில் ஒருவர் எந்த பாடப் பிரிவைப் படித்தாலும், நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், கல்லூரியில் அவர் விரும்பும் பாடப்பிரிவில் சேர முடியும்; ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இதுவரை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்த நிலையில் இனி இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பன உள்ளிட்ட யோசனைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துக் கேட்டு, அதனடிப்படையில் முடிவு எடுக்கலாம். ஆனால், எந்த வகையிலும் நுழைவுத்தேர்வை திணிக்க மத்திய அரசு முயலக்கூடாது’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

படிப்போடு மாதாந்திர உதவித்தொகை? மயிலாடுதுறையில் இளைஞர்களுக்குக் காத்திருக்கும் பம்பர் சான்ஸ்!
படிப்போடு மாதாந்திர உதவித்தொகை? மயிலாடுதுறையில் இளைஞர்களுக்குக் காத்திருக்கும் பம்பர் சான்ஸ்!
வெப்ப அலை விடுமுறை ஈடுசெய்ய... புதுச்சேரி பள்ளிகளுக்கு 7 சனிக்கிழமைகள் வேலை நாட்கள்!
வெப்ப அலை விடுமுறை ஈடுசெய்ய... புதுச்சேரி பள்ளிகளுக்கு 7 சனிக்கிழமைகள் வேலை நாட்கள்!
ஐஐடியில் 2 முறை தோல்வி.. ரூ.20,000 சம்பளம் டூ துபாயில் இளம் தொழிலதிபர்! செளரவ் உத்வேக கதை!
ஐஐடியில் 2 முறை தோல்வி.. ரூ.20,000 சம்பளம் டூ துபாயில் இளம் தொழிலதிபர்! செளரவ் உத்வேக கதை!
உள்கட்டமைப்பு, சமநிலை இன்னும் பல.. இந்தியாவுக்கே முன்னோடி தமிழ்நாடு: UDISE அறிக்கை
உள்கட்டமைப்பு, சமநிலை இன்னும் பல.. இந்தியாவுக்கே முன்னோடி தமிழ்நாடு: UDISE அறிக்கை

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
Embed widget