Aadhav Arjuna: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna Speech: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், விஜய் களத்திற்கு வாங்க என ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சானது, புதிய பாதைக்கு வித்திடுவது போன்று இருக்கிறது என்றே சொல்லலாம். அப்படி என்ன பேசினார்; விஜய் குறித்து என்ன பேசினார்? இதனால் , திருமாவளவனுக்கு சிக்கலா? என்பது குறித்து பார்ப்போம் எனவும் பார்ப்போம்.
புத்தக வெளியீட்டு விழா:
இன்று ( டிசம்பர் 6 ) ”எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்கிற புத்தகத்தை ஆதவ் அர்ஜூனா உருவாக்கியிருந்தார். இந்த புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட, முன்னாள் நீதிபதி சந்துரு , அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டுண்டே மற்றும் ஆதவ் அர்ஜீனா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
ஆதவ் அர்ஜீனா பேச்சு:
இவ்விழாவில் விசிக துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது “ 2026 தேர்தலில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும்; பிறப்பால் இனி முதலமைச்சர் தமிழ்நாட்டில் உருவாகக் கூடாது. தமிழ்நாட்டில் நடைபெறும் மன்னராட்சியை கேள்வி கேட்டால் என்னை சங்கி என்கிறார்கள்; ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என ஏன் சொல்லக் கூடாது ?; தமிழ்நாட்டில் தலித்தை ஒரு பொதுத் தொகுதியில் இன்று வரை நிறுத்த முடியவில்லை.
கொள்கைகள் பேசும் கட்சிகள், ஏன் அம்பேத்கரை ஏன் மேடைகளில் ஏற்றவில்லை. தலித் மட்டுமே பேசிக்கொண்டிருந்த அம்பேத்கரை, தலித் அல்லாத விஜய் பேசுவதன் வாயிலாக, திருமாவளவனின் கனவு நிறைவேறியுள்ளது. நீங்க, களத்திற்கு வாங்க விஜய்; கருத்தியல் தலைவர்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்” என ஆதவ் அர்ஜூனா பரபரப்பாக பேசினார்.
” புதிய பாதையை தேர்ந்தெடுக்கும் ஆதவ்?”
விசிக துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜூனா, அவ்வப்போது மறைமுகமாக திமுகவை தாக்கி பேசி வருகிறார். அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் , சமீபகாலமாக பேசி வருகிறார் ஆதவ் அர்ஜூனா.
ஆனால், இந்த முறை திமுகவின் மீது, தாக்குதலின் உச்சிக்கே சென்றுள்ளார். பிறப்பால், இனி முதலமைச்சர் இருக்க கூடாது என திமுக கட்சியை இறங்கி அடித்திருக்கிறார்.
கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியானது, கூட்டணியை கட்சியின் செயல்பாட்டை குறை கூறலாம், சுட்டிக் காட்டலாம்; ஆனால் அந்த கட்சி ஆட்சிக்கே வரக்கூடாது என திமுக கூட்டணி கட்சியான விசிக துணைப் பொதுச் செயலாளரே பேசியிருப்பதை பார்க்கும் போது, பல கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளது.
கேள்வி ஒன்று:, விசிக தலைவர் திருமாவளன் முன்பு கூறியிருந்ததாவது “ எங்கள் கூட்டணி கொள்கை கூட்டணி; அடுத்த தேர்தலிலிம் திமுக கூட்டணிதான் “ என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்தை வைத்து பார்த்தால், ஆதவ அர்ஜூனா கருத்து முற்றிலும் முரணாக உள்ளது. அப்படியென்றால், ஆதவ் அர்ஜூனா தவெக பக்கம் சாய்கிறாரா என கேள்வி எழுகிறது? மேலும் , களத்திற்கு நீங்க வாங்க விஜய் என்ற கருத்தும்,வலு சேர்ப்பதாக உள்ளது.
இரண்டாவது கேள்வி, திமுகவுக்கு எதிராக களத்திற்கு வந்திருக்கும் தவெக விஜய்யை , ஆதவ் அர்ஜூனா ஆதரிக்க காரணம் என்ன? அப்படியென்றால், திருமா மறைமுகமாக திமுகவுக்கு எதிரான பாதையை உருவாக்கிறாரா என்றும் கேள்வி எழுகிறது , திருமா மறைமுகமாக திமுகவுக்கு எதிரான பாதையை உருவாக்கவில்லையென்றால், திமுக கூட்டணிக்கு எதிராக பேசும் ஆதவ் அர்ஜூனா மீது ஏன் நடவடைக்கை எடுக்க ஏன் தயங்குகிறார்.
மூன்றாவது கேள்வி: திமுக பக்கம் இருக்கும் திருமாவளவனுக்கு, ஆதவ் நெருக்கடியை ஏற்படுத்துகிறாரா என்றும்; திருமாவளவனையும் இழுத்து, விஜய்யுடன் சேர்த்து புது கூட்டணி உருவாக்க ஆதவ் அர்ஜூனா முயலுகிறாரா என்றும் கேள்வி எழுகிறது.
இந்த முறை திமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பது போல ஆதவ் பேசியிருப்பதை பார்க்கையில், திமுகவுக்கு நேர் எதிர் பாதைக்கு வந்துவிட்டார் என்பதை உணர்த்துகிறது. இனியும் ஆதவ் மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் , அது நிச்சயம் திருமாவளவன் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும். ஏனென்றால், ஆதவ் அர்ஜூனா,விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது கருத்து நிச்சயம் கட்சியின் கருத்தாகத்தான் வெளிப்படும் . இந்நிலையில், திருமாவளவன் முடிவு, என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Also Read: Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு