Weather Report | தமிழகத்தில் புயல் எச்சரிக்கை? வெதர்மேன் ஷாக் REPORTஇனி டமால் டுமீல் | Chennai | Weather Man Pradeep Jhon
அடுத்த 5-6 நாட்கள் சென்னை-க்கு இப்படி தான் டமால் டுமீல் இரவில் மழை காலையில் குளிர்ச்சியான மேகமூட்டம் மாலையில் வெயில் மீண்டும் மீண்டும் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையில், இன்று அதிகாலை பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை தொடர்ந்தது. நான்கு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகள் மழை நீர் தேங்கியது, இதனால் அதிகாலையில் அலுவலகம் மற்றும் வேலைக்குச் சென்ற பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். வரும் ஏழு நாட்களுக்கும் மேலாக மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையையில் இரவில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் நகரின் பல இடங்களில் கனமழை பெய்தது. அதேபோல் நேற்று இரவிலும் சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அதிகாலை வரை இந்த மழை பெய்தது. சென்னை ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்பட அதனை சுற்றிய இடங்களில் மழை பெய்தது. அதேபோல் சென்னை புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில் இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. இதனால் சென்னையில் வெயில் முற்றிலுமாக தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இரவில் மழை பெய்வதால் காலையில் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. பிறகு மதியத்துக்கு மேல் மாலையில் வெயில் அடிக்கிறது.
இந்தநிலையில் வெதர்மேன் பிரதீப் ஜான் அடுத்த 5-6 நாட்கள் சென்னை-க்கு இப்படி தான் டமால் டுமீல் இரவில் மழை காலையில் குளிர்ச்சியான மேகமூட்டம் மாலையில் வெயில் மீண்டும் மீண்டும் ன் பதிவை கூட பார்க்க வேண்டாம். மழை பெய்யும் என்று நினைக்கிறேன். சென்னை முழுவதும் மழை பெய்யும். செப்டம்பர் மாத புயல்களும் மெதுவாக நகரும் புயல்கள் மற்றும் ஒரு மணி நேரத்திற்குள் 50-70 மிமீ மழை பெய்யக்கூடும் என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்,





















