மேலும் அறிய

"சிறப்பு மதிப்பெண் வேண்டாம்.. சிறப்புத் தேர்வு நடத்துங்கள்" - ஆசிரியர் செந்தில்குமார் யோசனை.

சிறப்பு மதிப்பெண்ணிற்குப் பதிலாகச் சிறப்புத் தேர்வு நடத்தி பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை, திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 181-ன்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், வெறும் சலுகைகளை மட்டும் அறிவிக்காமல் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்றும் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 26.08.2011 அன்று சட்டசபை விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி, உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி உள்ளிட்ட பாடங்களை மாணவர்களுக்குக் கற்பிக்க தமிழக அரசின் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதற்கான அரசாணை 177-ன் படி, 2012-ஆம் ஆண்டில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

தற்போது 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இடையில் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் போக, 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

வாக்குறுதி 181: ஏமாற்றமா? தீர்வா?

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, "திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்" எனத் தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக திமுக அறிவித்திருந்தது. ஆனால், தற்போதைய ஆட்சியின் 5 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையிலும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இருப்பது வேதனையளிப்பதாக செந்தில்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்தில் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களுக்குச் சில சிறப்பு மதிப்பெண்கள் (Weightage marks) வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த செந்தில்குமார், "சிறப்பு மதிப்பெண் வழங்கும் அரசாணையால் முதல்வர் கொடுத்த வாக்குறுதி பொய்யாகிவிடும். காலிப் பணியிடங்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்களும், வேலையில்லாப் பட்டதாரிகளும் இணைந்து தேர்வு எழுத வேண்டும் என்பது 15 ஆண்டுகளாக உழைத்த எங்களைப் புறக்கணிக்கும் செயலாகும்," என்றார்.

சிறப்புத் தேர்வு என்ற மாற்று வழி

சிறப்பு மதிப்பெண்ணிற்குப் பதிலாக, 2003-ஆம் ஆண்டு எஸ்மா (ESMA) காலத்தில் நியமிக்கப்பட்ட 11 ஆயிரம் பணியாளர்களைப் பணிநிரந்தரம் செய்தது போல, பகுதிநேர ஆசிரியர்களுக்கும் ஒரு 'சிறப்புத் தேர்வு' நடத்தி அவர்களை நிரந்தரம் செய்யலாம் என அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கணினி அறிவியல் ஆசிரியர்கள், தையல், இசை ஆசிரியர்கள் எனப் பலர் தொகுப்பூதியத்திலிருந்து காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்ட முன் உதாரணங்கள் உள்ளன. அதே முறையைப் பின்பற்றி, 15 ஆண்டு கால அனுபவத்தைக் கருத்தில் கொண்டு இவர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

குழப்பத்தில் ஆசிரியர்கள்: தெளிவுபடுத்துமா அரசு?

ஆசிரியர் தேர்வு வாரியம் எப்போது தேர்வு நடத்தும், எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன போன்ற எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டிடக்கலை போன்ற பாடங்களுக்குச் சிறப்பு மதிப்பெண் உண்டா என்பது குறித்தும் அரசாணையில் தெளிவில்லை.

"11,773 ஆசிரியர்களில் பலர் 50 வயதைக் கடந்துவிட்டனர். அவர்கள் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில ஆண்டுகளே உள்ள நிலையில், காலமுறை ஊதியத்தில் அவர்களை அமர்த்துவதே முறையானது. ஒரு மாதத்திற்கு 20 கோடி ரூபாயும், ஆண்டுக்கு 240 கோடி ரூபாயும் கூடுதலாக ஒதுக்கினால் இவர்களைச் சிறப்பாசிரியர்களாக்க முடியும். 6,550 கோடி நிதியை ஒரே நாளில் ஒதுக்கி மகளிர் உரிமைத் தொகை வழங்கிய முதல்வரால், ஒரு கையெழுத்தின் மூலம் எங்கள் வாழ்வை மாற்ற முடியும்," என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

முக்கியக் கோரிக்கைகள்

* வாக்குறுதி 181-ஐ அரசாணையாக்கிப் பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

 * பகுதிநேரப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி, அடிப்படைச் சம்பளம் ரூ. 20,600 வழங்கி சிறப்பாசிரியர்களாக அறிவிக்க வேண்டும்.

 * வேலை அனுபவம் மற்றும் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு இதனை அரசின் 'கொள்கை முடிவாக' அறிவிக்க வேண்டும்.

15 ஆண்டுகாலமாகப் பள்ளிக் கல்விக்காக உழைக்கும் இவர்களின் கோரிக்கைக்குத் தமிழக முதல்வர் செவிசாய்ப்பாரா என்பதே இவர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

இதுதான் கட்சி நடத்தும் விதமா இபிஎஸ்? - சி.வி. சண்முகம் கேள்வி!
இதுதான் கட்சி நடத்தும் விதமா இபிஎஸ்? - சி.வி. சண்முகம் கேள்வி!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
தமிழகத்தில் 2 நாட்கள் எங்கெல்லாம் கனமழை கொட்டும், சென்னை? - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் 2 நாட்கள் எங்கெல்லாம் கனமழை கொட்டும், சென்னை? - வானிலை மையம் எச்சரிக்கை

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Embed widget