Aavin Milk issue : ஆவின் பாலில் புழுக்கள்!சேலத்தில் பரபரப்பு.. ஆவின் நிர்வாகம் மறுப்பு!
சேலத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் புழு இருந்ததாக புகார் எழுந்த நிலையில், தற்போது ஆவின் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
சேலம் முகமது புறா குடியிருப்பு பகுதியில் இன்று காலை ஆவின் பாலை செளகத் என்பவர் வாங்கி சென்றுள்ளார். வீட்டில் சென்று அந்த பாலை பாத்திரத்தில் ஊற்றிய போது புழு இருந்ததாகவும் மற்றொரு பால் பாக்கெட் பிரித்து ஊற்றிய பொழுது அதிலும் புழுக்கள் இருந்தால் அதிர்ச்சி அடைந்துள்ளார். .
இதனால் பாத்திரத்துடன் பாலை கொண்டு வந்து கடைக்காரரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சேலம் ஆவின் நிறுவனத்தில் இருந்து வழங்கப்படும் இந்த பால் பாக்கெட்டுகள் இன்றைய தேதியில் அச்சிடப்பட்டுள்ளது, இருந்தபோதிலும் பால் பாக்கெட்டுகளில் புழுக்கள் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .
இது குறித்து ஆவின் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அந்த பகுதிக்கு வந்த அதிகாரிகள் கள ஆய்வில் ஈடுப்பட்டனர். அப்போது புகரளித்தவர்களிடம் வந்து பால் பாக்கெட்டை கேட்டுள்ளனர், அவர்கள் அந்த பாலை கீழே ஊற்றிவிட்டதாக கூறியுள்ளனர் அப்போது அந்த பகுதியில் உள்ள கடைகளில் ஆவின் பால் பாக்கெட்டுகளை வாங்கி வடிக்கட்டி சோதனை செய்து பார்த்துள்ளனர். ஆனால் பால் பாக்கெட்டுகளில் புழுக்கள் ஏதும் தென்படவில்லை.
அதன் பிறகு புகாரளித்தவரும் மீண்டும் அதே கடையில் பால் பாக்கெட்டை வாங்கி வடிக்கட்டி பார்த்துள்ளனர், அதில் புழுக்கள் இல்லை என்பதை தெரிந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் அளித்த புகாரை திரும்ப பெற்றுக்கொள்ள போவதாகவும் ஆவினில் பால் பாக்கெட்டுகள் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறது என்றும் அதனால் காலையில் அளித்த புகாரை பெற்றுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்