மேலும் அறிய

DMK CONGRESS Alliance : திமுகவிற்கு அடிபணிந்த காங்கிரஸ்.! உறுதியானது கூட்டணி.? ஒரே நாளில் ஏற்பட்ட ட்விஸ்ட்

DMK CONGRESS Alliance : சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில், திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடருமா.? என்ற கேள்வி எழுந்த நிலையில், இரவோடு இரவாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பணியானது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக, சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் வகையில் திட்டத்தை தீட்டி செயல்படுத்தி வந்தார். ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என நிபந்தனையை விதித்தது. ஒரு கட்டத்தில் கேட்ட தொகுதியை கொடுக்கவில்லையென்றால் தவெகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என காங்கிரஸ் திமுகவை மிரட்டி வந்தது.

தவெகவுடன் கூட்டணி- மிரட்டிய காங்கிரஸ்

காங்கிரஸ் நிர்வாகிகள் தவெக தலைவர் விஜய்யிடம் கூட்டணி தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தையையும் நடத்தி வந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் மேலிடத்தில் வந்த அழுத்தம் காரணமாக கூட்டணி கட்சிகளோடு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை கடந்த 28ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட், உள்ளாட்சி தேர்தலில் 20% இடம் வழங்க வேண்டும் என்ற பட்டியலை கொடுக்கப்பட்டுள்ளது.

திமுகவிற்கு ஆதரவாக காங். எம்எல்ஏக்கள்

ஆனால் திமுகவோ கூட்டணியில் புதிய கட்சிகள் வந்துள்ளதால் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இல்லையென தெரிவித்து விட்டது. மேலும் ஒரே ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமே வழங்க முடியும் எனவும் கூறிவிட்டது. இதனையடுத்து பேச்சுவார்த்தை சுமூகமாக இல்லாத நிலை ஏற்பட்டது. மேலும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்த கிரிஸ் சோடங்கர், இனி திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச தான் செல்லவில்லையென தலைமைக்கு கடிதமாகவே கொடுத்துவிட்டார். இந்த சூழலில் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்தால், தொடரட்டும் இல்லையென்றால் கூட்டணியை விட்டு செல்லட்டும் என்ற முடிவிற்கு திமுக வந்துவிட்டதாகவே கூறப்பட்டது. 

இந்தநிலையில் தான் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபல், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் யாருடன் கூட்டணி வைக்கலாம் என கருத்து கேட்டுள்ளார். அதற்கு பெரும்பாலானவர்கள் திமுக கூட்டணி தான் பெஸ்ட் என தெரிவித்துள்ளனர். ஒரு சில காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமமானது எனவும், பாஜகவைப்பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்காத விஜய்யுடன் எப்படி காங்கிரஸ் கூட்டணி வைக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் திமுக ஆதரவு கருத்தை தெரிவித்ததால்,  திமுக தலைமையை சமாதானம் செய்யும் வகையில் இறுதிகட்ட முயற்சியாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை களத்தில் இறக்கினார் சோனியா காந்தி,

பா.சிதம்பரத்தால் ஏற்பட்ட மாற்றம்

அந்த வகையில் நேற்று மதியம் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு 27 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்தது. ஆனால் 30 தொகுதிக்கு குறைய கூடாது என ராகுல் காந்தி உறுதியாக இருந்துள்ளார். இதனையடுத்து நேற்று இரவு மீண்டும் திமுக- காங்கிரஸ் கட்சியிடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் 28  தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதனை  இரவோடு இரவாக ப சிதம்பரம் ராகுல்காந்திக்கு தெரிவித்துள்ளார். மேலும் தொகுதி முக்கியமல்ல கூட்டணியும், நட்பு தான் முக்கியம் என தெரிவித்துள்ளார். இதற்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை தரப்பு ஒப்புக்கொண்டதையடுத்து இன்று மதியம் அண்ணா அறிவாலயத்தில் திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதியாகிறது. எனவே இன்று மதியம் திமுகவுடன் முதலில் ராஜ்யசபா சீட ஒதுக்கீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இதனையடுத்து அடுத்தக்கட்டமாக தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செயப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
Embed widget