ஈரானின் ட்ரோன் தாக்குதல்கள் அமெரிக்கா மட்டுமின்றி, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அதன் நட்பு நாடுகளையும் குறிவைக்கின்றன.
Iran USA Clash: இதென்னடா அமெரிக்காவுக்கு வந்த சோதனை..! 20,000 Vs 4 மில்லியன் - டாலர்களை விழுங்கும் ஈரான்
Iran USA Clash: ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் 20 ஆயிரம் டாலர்கள் மதிப்பிலான ட்ரோன்களை அழிக்க, 4 மில்லியன் டாலர்கல் மதிப்பிலான ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.

Iran USA Clash: ஈரானின் தாக்குதல்களை முறியடிக்க அமெரிக்கா அதிகப்படியான டாலர்களை செலவழிர்த்து வருகிறது.
திருப்பி அடிக்கும் ஈரான்..
தொடங்கி மூன்று நாட்களே ஆன நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. தெஹ்ரானின் ட்ரோன் தாக்குதலானது அமெரிக்கா மட்டுமின்றி அதன் நட்பு நாடுகளான பஹ்ரைன் தொடங்கி ஐக்கிய அரபு அமீரகம் மீதும் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி ஆயுதக் கிடங்குகளை காலியாக்கி வருகிறது. இந்த மோதலில் வெற்றி என்பது முதலில் எந்த தரப்பிற்கு ஆயுதம் குறைகிறது என்பதை பொறுத்தே அமையும் என கூறப்படுகிறது.
ஷாஹெத் 136 எனப்படும் ஒருமுறை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ட்ரோன்கள், சிறிய மற்றும் அடிப்படை க்ரூஸ் ஏவுகணைகள், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளை தாக்கி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள், எண்ணெய் உட்கட்டமைப்புகள் உள்ளிட்டவை ட்ரோன்கள் மூலம் குறிவைத்து தாக்கப்படுகின்றன.
அமெரிக்கா.. வெற்றியா? தோல்வியா?
அமெரிக்காவானது தங்களது சொந்த தயாரிப்பான பாட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை கொண்டு, ஈரானின்ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை வெற்றிகரமாக தடுத்து வருகிறது. அமெரிக்காவின் மேற்குறிப்பிட்ட ஏவுகணைகள் மூலம், ஈரானின் தாக்குதல்கள் 90 சதவிகிதம் வரை முறியடிக்கப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. ஆனால், உக்ரைன் போரிலிருந்து தற்போது வரை வெறும் 20 ஆயிரம் டாலர்கள் அதாவது ரூ.18.43 லட்சம் மதிப்பிலான ட்ரோன்களை அழிக்க, 4 மில்லியன் டாலர்கள் அதாவது ரூ.36.86 கோடி மதிப்பிலான ஏவுகணைகளை பயன்படுத்துவது தான், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. எதிரிகளின் மிகப்பெரிய மற்றும் சிக்கலான தாக்குதல்களை முறியடிக்க வடிவமைக்கப்பட்ட ஏவுகணைகளை, ஈரானின் மலிவான ட்ரோன்கள் விழுங்கி வருகின்றன.
ஆயுதங்களின் பலத்தில் தீர்ப்பு..
தற்போது நிலவும் வேகம் அப்படியே நீடித்தால் அமெரிக்கா மற்றும் ஈரானும் சில நாட்கள் அல்லது வாரங்களில் தங்களது ஆயுத கையிருப்பை இழக்கக் கூடும். அதில் யார் நீண்டகாலம் தாக்குப் பிடிக்கிறார்களோ அவருகளுக்கு இந்த மோதலில் வெற்றி கிடைக்கக் கூடும். காசாவில் நடந்த போரினால் ஈரானின் பிராந்திய ஆதரவாளர்கள் கடுமையாக பலவீனமடைந்துள்ளனர். ஜூன் மாதத்தில் 12 நாட்கள் நீடித்த போரில் இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல்களால் ஈரானின் ஏவுகணை திறன் பின்னடைவை சந்தித்துள்ளது. அதேநேரம், தங்களது பாதுகாப்பு ஆயுதங்களை இழப்பதை கருத்தில் கொண்டு, மோதலை முடிவுக்கு கொண்டு வர வளைகுடா நாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஆயுதங்கள் கையிருப்பு
கத்தார் கைவசம் உள்ள பாட்ரியாட் தடுப்பு ஏவுகணைகள் அடுத்த 4 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என சர்வதேச ஆயுத தரவுகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலுடனான கடந்த ஆண்டு மோதலுக்குப் பிறகு ஈரான் வசம் தற்போது சுமார் 2 ஆயிரம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம், ரஷ்யா போன்ற ஆதரவு நாடுகள் மூலம் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான ஷாஹெத் ட்ரோன்கள் தயாரிக்கும் திறனை கொண்டுள்ளதால், அது ஈரானுக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. தற்போதைய அமெரிக்கா உடனான மோதலில் பெரும்பாலும் ட்ரோன்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் திவிரமடையும்போது பயன்படுத்துவதற்காக பாலிஸ்டிக் ஏவுகணைகள் சேமிக்கப்பட்டுள்ளன.
Frequently Asked Questions
ஈரானின் ட்ரோன் தாக்குதல்கள் எந்தெந்த நாடுகளை குறிவைக்கின்றன?
ஈரானின் தாக்குதல்களை முறியடிக்க அமெரிக்கா என்ன பயன்படுத்துகிறது?
அமெரிக்கா தனது சொந்த தயாரிப்பான பாட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை பயன்படுத்தி ஈரானின் ட்ரோன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை முறியடித்து வருகிறது.
அமெரிக்கா தனது ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க எவ்வளவு செலவழிக்கிறது?
உக்ரைன் போரிலிருந்து, சுமார் 18.43 லட்சம் ரூபாய் மதிப்பிலான ட்ரோன்களை அழிக்க, 36.86 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்துகிறது. இது ஒரு கவலையாக உள்ளது.
இந்த மோதலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை எப்படி தீர்மானிக்க முடியும்?
முதலில் யாருடைய ஆயுதங்கள் குறைகிறதோ, அவர்களே இந்த மோதலில் தோல்வியடைவார்கள். நீண்ட காலம் தாக்குப் பிடிப்பவரே வெற்றி பெறுவார்.
ஈரானின் ஆயுத கையிருப்பு பற்றி என்ன தெரியும்?
ஈரான் வசம் சுமார் 2 ஆயிரம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருக்கலாம். ரஷ்யா போன்ற நாடுகளின் உதவியுடன் தினமும் நூற்றுக்கணக்கான ஷாஹெத் ட்ரோன்களை தயாரிக்கும் திறனையும் கொண்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















