மேலும் அறிய

TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அவர் முன்பு கொடுத்த வாக்கை இன்னும் நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டதாகவும் மவுனம் ஏன்? ரீல் டூ ரியல் மாறியது ஏன்? காலம் கடத்தி வருவது ஏன்? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது.

தமிழ் திரையுலகின் உச்சபட்ச நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் மீது ஆர்வத்துடன் காணப்பட்டு வந்த நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் யாருக்கும் தங்களது ஆதரவு இல்லை என்ற அறிவிப்பையும் விஜய் வெளியிட்டார். மேலும், 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடும் என்ற அறிவிப்பையும் விஜய் வெளியிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது முடிந்தது. இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார்? என்று அவரது ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் மற்ற அரசியல் கட்சியினரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். த.வெ.க.வின் கொள்கைகள், செயல்திட்டங்களை கூறிய விஜய், தான் அரசியலுக்கு வருவதன் காரணம்? தன்னுடைய அரசியல் எதிரி யார்? தன்னுடைய நிலைப்பாடு என்ன? என்று விளக்கமாக கூறினார். பா.ஜ.க.விற்கும், தி.மு.க.விற்கும் எதிராக தான் அரசியலை முன்னெடுக்கப் போவதாக கூறியிருப்பதுடன் பல கருத்துக்களையும் கூறினார்.  மேடையில் விஜய் பேசியது உணர்ச்சிவசமாகவும் அதே நேரம் ரசிகர்களை கவரும் விதமாக நகைச்சுவையாகவும் இருந்தது. ஒரு சில நேரங்களில் திரைப்பட வசனங்களைப் போல் விஜய் மூச்சுவிடாமல் உணர்ச்சியின் உச்சத்தில் இருந்து பேசினார். 

இந்தநிலையில் விஜய்யின் பழைய செய்தியாளர் சந்திப்பு ஒன்று தற்போது ட்ரெண்டாகி வருகிறது. விஜய் அரசில் கட்சி ஆரம்பிப்பாரா? மாட்டாரா? அப்படி அரசியலில் இறங்கினால் எந்தக் கட்சியில் இணைவார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பாக பத்திரிகைகளில் நிறைய விவாதங்கள் நடத்து இருக்கின்றன. கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் காந்தியை சந்திப்பதற்காக விஜய்யும் அவரது தந்தை சந்திரசேகரும் டெல்லி சென்று சந்தித்துவிட்டுத் திரும்பினார்கள். அப்போது விஜய் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகத் தகவல் ஊடகங்களில் தீயாய் பரவியது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவிக்கு விஜய் வரப்போகிறார், தேசிய அளவில் விஜய்க்கு பதவி வழங்கப்பட இருக்கிறது அதனால் தான் ராகுல் காந்தியே விரும்பி விஜய்யை அழைத்து 2 மணி நேரம் இதுக்குறித்து தான் பேசியுள்ளார்கள் என்றெல்லாம் தகவல்கள் கசிந்ததன.

ராகுல் சந்திப்பு பற்றி வாய்யை திறக்காத விஜய் அவர் திடீரென்று ஊடகத்தைச் சந்தித்து இதுக்குறித்து விளக்கம் கொடுத்தப்போது விஜய் ஆணித்தரமாக ஒரு வாக்குறுதியை கொடுத்திருக்கிறார். எனக்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் வந்தால், அதை ஊடகத்தினரைச் சந்தித்து முறையாக அறிவித்துவிட்டுத் தான் தொடங்குவேன். அது உறுதி. உங்களிடம் சொல்லாமல் கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாக வாக்கு அளித்திருக்கிறார். அவர் ஊடகத்தைச் சந்தித்துச் சொல்லிவிட்டுத்தான் கட்சியை அறிவிப்பேன் என சொல்லியதை மறந்துவிட்டார் போல தெரிகிறது. மறந்து விட்டாரா அல்லது தற்போது ஊடகத்தை சந்திக்க தைரியம் இன்னும் வரவில்லையா தற்போது கேள்வி எழுந்துள்ளது. கட்சி ஆரம்பித்து 9 மாதங்கள் ஆகிய  நிலையில் இதுவரை ஒருமுறைகூட அவர் சந்திக்கவே இல்லை, இந்த வாக்குறுதியை அவர் ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை. அதற்கு விஜய் எப்போது நேரம் ஒதுக்குவார்? கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா? என்ற கேள்வி தீயாய் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அரசியல் வீடியோக்கள்

TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்
TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

VCK: திருமாவிற்கு அடுத்து ஆதவ் அர்ஜூனாவா? ஆதங்கத்தில் விசிக மூத்த தலைவர்கள்!
VCK: திருமாவிற்கு அடுத்து ஆதவ் அர்ஜூனாவா? ஆதங்கத்தில் விசிக மூத்த தலைவர்கள்!
அம்பேத்கரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள் - ராமதாஸ்
அம்பேத்கரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள் - ராமதாஸ்
Cuddalore VCK PMK: கொதிக்கும் கடலூர் - முற்றும் பாமக & விசிக மோதல், மஞ்சக்கொல்லையில் நவ.1ல் நடந்தது என்ன?
Cuddalore VCK PMK: கொதிக்கும் கடலூர் - முற்றும் பாமக & விசிக மோதல், மஞ்சக்கொல்லையில் நவ.1ல் நடந்தது என்ன?
Breaking News LIVE 8th Nov 2024: ”நாசகார சீண்டலுக்கும், தூண்டலுக்கும் இரையாகிவிடக்கூடாது” - விசிக தலைவர் திருமாவளவன்
Breaking News LIVE 8th Nov 2024: ”நாசகார சீண்டலுக்கும், தூண்டலுக்கும் இரையாகிவிடக்கூடாது” - விசிக தலைவர் திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்Kash Patel : ட்ரம்ப் டிக்கடித்த CIA CHIEF..குஜராத்காரன்.. மோடியின் விசுவாசி! யார் இந்த காஷ் பட்டேல்?NTK Cadres Fight : ‘’ஏய்..நீ வெளிய போடா!’’நாதக நிர்வாகிகள் கடும் மோதல்! போர்க்களமான PRESSMEET

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VCK: திருமாவிற்கு அடுத்து ஆதவ் அர்ஜூனாவா? ஆதங்கத்தில் விசிக மூத்த தலைவர்கள்!
VCK: திருமாவிற்கு அடுத்து ஆதவ் அர்ஜூனாவா? ஆதங்கத்தில் விசிக மூத்த தலைவர்கள்!
அம்பேத்கரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள் - ராமதாஸ்
அம்பேத்கரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள் - ராமதாஸ்
Cuddalore VCK PMK: கொதிக்கும் கடலூர் - முற்றும் பாமக & விசிக மோதல், மஞ்சக்கொல்லையில் நவ.1ல் நடந்தது என்ன?
Cuddalore VCK PMK: கொதிக்கும் கடலூர் - முற்றும் பாமக & விசிக மோதல், மஞ்சக்கொல்லையில் நவ.1ல் நடந்தது என்ன?
Breaking News LIVE 8th Nov 2024: ”நாசகார சீண்டலுக்கும், தூண்டலுக்கும் இரையாகிவிடக்கூடாது” - விசிக தலைவர் திருமாவளவன்
Breaking News LIVE 8th Nov 2024: ”நாசகார சீண்டலுக்கும், தூண்டலுக்கும் இரையாகிவிடக்கூடாது” - விசிக தலைவர் திருமாவளவன்
A R Murugadoss : இப்படியும் இருக்காங்களா...ஏ.ஆர் முருகதாஸ் பற்றி எஸ்.கே சொன்ன சீக்ரெட்
A R Murugadoss : இப்படியும் இருக்காங்களா...ஏ.ஆர் முருகதாஸ் பற்றி எஸ்.கே சொன்ன சீக்ரெட்
"எங்களுக்கு எதுக்கு டென்ஷன்? எட்டு கால் பாய்ச்சலில் தேர்தல் பணிகள்" அமைச்சர் சேகர்பாபு
Watch Video: இதுவே முதன்முறை! சவுதி அரேபியாவில் கொட்டிய பனிமழை! வெண்மை நிறமாக மாறிய பாலைவனம்!
Watch Video: இதுவே முதன்முறை! சவுதி அரேபியாவில் கொட்டிய பனிமழை! வெண்மை நிறமாக மாறிய பாலைவனம்!
Donald Trump: ஆட்டம் ஆரம்பம்..! வெள்ளை மாளிகையில் கைவைத்த டொனால்ட் ட்ரம்ப், கலக்கத்தில் குடியேறிகள்
Donald Trump: ஆட்டம் ஆரம்பம்..! வெள்ளை மாளிகையில் கைவைத்த டொனால்ட் ட்ரம்ப், கலக்கத்தில் குடியேறிகள்
Embed widget