மேலும் அறிய

NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!

NEET UG Exam 2025: 2025ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 7ஆம் தேதி வரை தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம். தேர்வுக் கட்டணம் எவ்வளவு, தேர்வு மையம் எங்கே என்பன உள்ளிட்ட பிற விவரங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புகளிலும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்று இந்தத் தேர்வு அழைக்கப்படுகிறது. 

தேர்வு எப்போது?

2025ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 7ஆம் தேதி வரை தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கிடையே நீட் கேள்வித் தாளில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, கொரோனா காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கூடுதல் நேரம் வழங்கலும் ஆப்ஷனல் கேள்வி முறையும், இந்த முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு 2025 (நீட் இளங்கலைத் தேர்வு) பேனா மற்றும் காகித முறையில் நடைபெறும் என்றும் ஒரே நாளில் ஒரே ஷிஃப்டில் இந்தத் தேர்வு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தேர்வுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.

  • விண்ணப்பிக்கும் தேர்வர்களின் வயது, மாணவர் சேர்க்கையின்போது 17 நிறைவு அடைந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் உச்ச வயது வரம்பு எதுவுமில்லை.
  • நீட் இளங்கலைத் தேர்வை எழுத, விண்ணப்பதாரர்கள் வேதியியல், இயற்பியல், உயிரியல்/ உயிர் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தனித்தனியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட தேர்வர், 12ஆம் வகுப்பில் ஒட்டுமொத்தமாக 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!

தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்கும் முன், தேர்வர்கள் என்டிஏ அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2025/02/2025020754.pdf என்ற இணைப்பில் அறிவிக்கையை முழுமையாகப் பெற்ளாம்.

  • ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பிற வகைகளில் அனுப்பப்படும் விண்ணப்பப் படிவம் ஏற்கப்படாது.
  • ஒரு தேர்வர் ஒரு படிவத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட படிவம் இருந்தால், அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும், அல்லது தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும்.
  • இ மெயில் முகவரி, மொபைல் ஆகியவை உங்களுடையதாக அல்லது உங்கள் பெற்றோர்/ பாதுகாவலரின் விவரமாக இருக்க வேண்டும். அந்த எண், இ மெயில் முகவரிக்குத்தான் விவரங்கள் அனுப்பப்படும்.
  • அனைத்து கேள்விகளுக்கும் உரிய விடையை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பம் ஏற்கப்படாது.
  • வருங்காலத் தேவைக்காக, கட்டணம் செலுத்தியது உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • 2 முறை விண்ணப்பக் கட்டணம் தவறுதலாக செலுத்தப்பட்டு விட்டால், என்டிஏ சம்பந்தப்பட்ட தேர்வருக்கு கட்டணத்தைத் திரும்பச் செலுத்திவிடும்.

தேர்வுக் கட்டணம்

பொதுத் தேர்வர்களுக்கு – ரூ.1,700

பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர், ஓபிசி க்ரீமி லேயர் அல்லாதோர்- ரூ.1,600

எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ மூன்றாம் பாலினத்தவர் – ரூ.1000

வெளிநாட்டுத் தேர்வர்கள் – ரூ.9,500

தேர்வு மையம்

ஏப்ரல் 26ஆம் தேதி அன்று தேர்வு மையங்கள் குறித்த விவரம் வெளியிடப்படும். ஹால் டிக்கெட்டை மே 1ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்று ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.

முழு விவரங்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2025/02/2025020754.pdf

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஊதியத்துடன் இன்டர்ன்ஷிப்; மாதம் ரூ.30,000 உதவித்தொகை- டிஆர்டிஓ அறிவிப்பு- கலந்துகொள்வது எப்படி?
ஊதியத்துடன் இன்டர்ன்ஷிப்; மாதம் ரூ.30,000 உதவித்தொகை- டிஆர்டிஓ அறிவிப்பு- கலந்துகொள்வது எப்படி?
497, 494, 492! - மயிலாடுதுறையில் சாதனைக் கொடி நாட்டிய காவலர் வீட்டுப் பிள்ளைகள். முழு விவரம் உள்ளே! 
497, 494, 492! - மயிலாடுதுறையில் சாதனைக் கொடி நாட்டிய காவலர் வீட்டுப் பிள்ளைகள். முழு விவரம் உள்ளே! 
புத்தகங்கள் நனையாமல் இருக்க மழைநீரோடு போராட்டம்.. 10-ஆம் வகுப்பில் 473 மதிப்பெண் அள்ளிய அபர்ணா!
புத்தகங்கள் நனையாமல் இருக்க மழைநீரோடு போராட்டம்.. 10-ஆம் வகுப்பில் 473 மதிப்பெண் அள்ளிய அபர்ணா!
TN 10th Result 2026: நீரில் மூழ்கி இறந்த மாணவர் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை; எவ்வளவு மார்க் தெரியுமா? - கண்ணீரில் பெற்றோர்
நீரில் மூழ்கி இறந்த மாணவர் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை; எவ்வளவு மார்க் தெரியுமா? - கண்ணீரில் பெற்றோர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Officers Transfer: வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
Trump Vs Iran: “ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
“ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
US Iran War: செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
Honda Activa e Vs TVS iQube: ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? டிவிஎஸ் ஐக்யூப்-ஆ.? விலை, மைலேஜ், அம்சங்களில் எது சிறந்தது.? தெரிஞ்சுக்கோங்க
ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? டிவிஎஸ் ஐக்யூப்-ஆ.? விலை, மைலேஜ், அம்சங்களில் எது சிறந்தது.?
Tata-Jeep Partnership: 'வெளிநாட்டு ஸ்டைல், உள்நாட்டு உணர்வு'; டாடா உடன் கைகோர்த்த ஜீப்; நம்ம ஊரில் தயாராகும் புதிய SUV
'வெளிநாட்டு ஸ்டைல், உள்நாட்டு உணர்வு'; டாடா உடன் கைகோர்த்த ஜீப்; நம்ம ஊரில் தயாராகும் புதிய SUV
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
Embed widget