TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமானை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வரும் சூழலில், த.பெ.தி.க.வினர் சீமான் வீட்டை முற்றுகையிட்டு கோசம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
”தந்தை பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? மதுவுக்கு எதிரான போராட்டத்தில் மரத்தை வெட்டி சாய்த்தது தான் பெரியாரின் பகுத்தறிவா? காம இச்சையை தாய், மகளுடன் தீர்த்துக் கொள்ளலாம் என கூறியவர் பெரியார்" என சீமான் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இதனிடையே, தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கு.ராமகிருட்டிணன் சீமானுக்கு எதிராக ஓரு வீடியோ வெளியிட்டார். அதில்,”இது தமிழ்சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாது. பெரியார் அப்படி சொன்னார் என்பதற்கான ஆதாரத்தை சீமான் காட்டவில்லை என்றால், சீமான் வீட்டிற்கு நேரில் செல்வேன். அவர் என்னிடத்தில் பெரியார் சொன்னார் என்பதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். ஒருவேளை காட்டவில்லை என்றால் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்”என்றார்.
இந்த நிலையில், நீலாங்கரையில் இருக்கும் சீமான் வீட்டிற்கு முன்பு இன்று தபெதிகவினர் போராட்டம் நடத்தினர். சீமானுக்கு எதிராக கோசங்களை எழுப்பிய போது தபெதிகவினருக்கும் போலிசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.