IPS IAS transfer | இது வெறும் டீசர் தான்! கலக்கத்தில் அதிகாரிகள்! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்
சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரின் மாற்றம் வெறும் டீசர் தான் என்றும், தமிழ்நாட்டில் இன்னும் பல ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை கூண்டோடு மாற்ற ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது..
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம், ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை என அடுத்தடுத்த சம்பவங்களால், காவல்துறையின் மீதும் சில ஐஏஎஸ் அதிகாரிகளின் மீதும் ஸ்டாலின் கடுமையான அப்சட்டில் இருப்பதாக தெரிகிறது.
அதனால் அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பே அதிகாரிகளின் மாற்றத்தை தொடங்கிவிட்டார் ஸ்டாலின். அதன் காரணமாகவே சமீபத்தில் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்று வந்த சுப்ரியா சாகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு மாற்றப்பட்டார். அதேபோல் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் தலைவராக இருந்த மற்றொரு மூத்த அதிகாரி ஜெகந்திப் சிங் வேடியும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையை கவனிக்குமாறு மாற்றப்பட்டுள்ளார். மேலும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையிலிருந்து உயர்கல்விக்கு மாற்றப்பட்டுள்ளார் பிரதீப் யாதவ்.
இதேபோன்று மங்கத் ராம் சர்மா, சந்திரமோகன், மணிவாசன், செந்தில்குமார், செல்வராஜ், ஜான் லூயிஸ் என பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளின் பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் தான் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் பாய் ரத்தோரின் பதவியும் மாற்றப்பட்டு புதிய சென்னை கமிஷனர் ஆக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரம் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக டேவிட்சன் தேவாசிர்வாதத்தை நியமித்துள்ளது தமிழக அரசு.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகார ரீதியாக பல்வேறு முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு வரும் ஸ்டாலின், விரைவில் அமைச்சரவையிலும் கை வைக்கப் போகிறார், அதன் டீசர் தான் இந்த அறிவிப்புகள் என்கிறது கோட்டை வட்டாரம்.
இந்நிலையில் விரைவில் வெளிநாடு செல்ல ஸ்டாலின் திட்டமிட்டுள்ள நிலையில் அதற்குள் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.