CEO Malavika Hegde: ரூ.7000 கோடி கடன்.... ஒரே ஆண்டில் ‛Café Coffee Day ’வை மீட்ட மாளவிகா ஹெக்டே!
CEO Malavika Hegde: சித்தார்த்தாவின் மரணத்துக்குப் பிறகு காபி டே நிறுவனம் காணாமல் போய்விடும் எனப் பலரும் கருதினர்.ஆனால் அத்தனை பேச்சுகளையும் சுக்கு நூறாக உடைத்து தனியொரு பெண்ணாக இருந்து சாதித்துக் காட்டியுள்ளார் மாளவிகா ஹெக்டே. இவர்தான் சித்தார்த்தாவின் மனைவி. 2020ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் காபி டே நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக மாளவிகா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் ஆவார். அன்று முதல் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தார். 2019ஆம் ஆண்டில் காபி டே நிறுவனத்துக்கு ரூ.7,000 கோடிக்கு மேல் கடன் இருந்தது. கணவனை இழந்த சோகத்தில் இருந்த மாளவிகாவுக்கு இது மிகப் பெரிய சுமைதான். ஆனால் அவர் மனம் தளரவே இல்லை. தொடர்ந்து உழைத்தார். கணவனின் மரணம் மனைவிக்கு பேரிடியாக இருந்திருக்கிறது. அந்த இழப்பு எவ்வளவு ஆழமானது, பயங்கரமானது, வேதனையானது என்பதை மாளவிகா ஹெக்டேவைப் பார்த்தால் புரியும். ஒருபுறம் கணவர் இறந்துவிட்டார், மறுபுறம் ரூ.7,000 கோடி கடனில் இருக்கும் நிறுவனம், மறுபுறம் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கை. இப்படி பல சிரமங்கள் மாளவிகா ஹெக்டேவைச் சூழ்ந்தது. காபி டே நிறுவனத்துக்கு கடன் அதிகமாகிவிட்டால், கணவருக்கும் குடும்பத்துக்கும் கெட்ட பெயர். நிறுவனம் மூடப்பட்டால், ஆயிரக்கணக்கான ஊழியர்களின் குடும்பங்கள் ரோட்டில் விழும். இதையெல்லாம் கருத்தில் கொண்டே மாளவிகா அந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தார்.