மேலும் அறிய

TVK Vijay Speech LIVE: குட்டிக்கதையுடன் தொடங்கிய விஜய்.. வேலூரில் மாஸ் சம்பவம்.. மிரண்ட தொண்டர்கள்!

TVK Vijay Speech LIVE Updates: வேலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார்.

வேலூர் மாவட்டத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட தவெக தொண்டர்கள் பங்கேற்றனர். 

அனுபவம் முக்கியம் இல்லை - விமர்சித்த விஜய்

இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய், “எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான். யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம். இது நிஜம் என உறுதிமொழி எடுத்து பேச தொடங்கினார். தொடர்ந்து குட்டிக்கதை ஒன்றை தெரிவித்தார். அடங்காத காளை குறித்த கதையை அவர் தெரிவித்தார். அனுபவம் இல்லை என சொல்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒவ்வொரு சூழலுக்கு ஏற்றவாறு எப்படி ஒரு விஷயத்தை அணுகுகிறார் என்பதே முக்கியமானது. 

மக்களை நேசிக்கும் நல்ல தலைமை இல்லாததால் இத்தனை ஆண்டுகளாக மு.க.ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பிய மக்களுக்கு வெகுஜன இயக்கமாக வந்தது தான் தமிழக வெற்றிக் கழகம். நான் உங்களை நேரில் இருக்கும் ஊருக்கு வந்து சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் நமக்கெதிராக என்னென்ன சூழ்ச்சிகள் நடக்கிறது என்பது தெரியும். நம் ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்துக்கு நேரடியாக வருவேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

வரப்போகும் சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தல் என முதலமைச்சர் ஸ்டாலின் என தெரிவித்தார். இந்த தேர்தல் விஜய்க்கும், மு.க.ஸ்டாலினுக்கும் நடக்கும் போர். அவரோட ஆட்சியில் தான் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம் என சொல்கிறார். ஆனால் அண்ணா, காமராஜர் ஆட்சியில் அப்படி இருந்தது. இப்போது சூப்பர் ஸ்டாண்ட் அப் காமெடிக்காரர் நடத்தும் மாநிலமாக மாறி விட்டது. 

இது அதிசய தேர்தல்

2026ம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தில்லாக நிற்கும். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நடக்கும் தேர்தலான நினைக்க வேண்டாம். இது 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசய தேர்தல். இந்த தேர்தலில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் விஜய்யை எதிர்க்கிறது. நான் ஊழலை எதிர்க்கிறேன். அந்த காண்டு தான் எல்லாருக்கும். மக்கள் விஜயுடன் இருப்பதால் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்கிறார்கள். என் மீது அவதூறு பரப்பினால் அது மக்கள் மீது பரப்புவதற்கு சமம். என்னை அசிங்கமாக பேசினால் அது மக்களை பேசுவதற்கு சமமாகும். இந்த விஜயும் மக்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதது. 

இதை யாரும் அசைக்க முடியாது. மக்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா?, மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா?..  தவெகவுக்கு போட்டி திமுக தான் என்பது மக்களுக்கு தெரியும். நாம் சீரியஸாக பேசும்போது சிலர் வாண்டட் ஆக வந்து வண்டியில் ஏறுகிறார்கள். இங்கு காமெடிக்கெல்லாம் இடமில்லை.

கரூர் சம்பவத்தில் ஆவேசம்

கரூர் விஷயத்தில் ஏன் என் மீது பழியைப் போட்டீர்கள்?. உங்களுக்கு மனசாட்சி ஒன்று இருந்தால் அப்படி பேசியிருப்பீர்களா?. எனக்கு எதிரியெல்லாம் யாரும் இல்லை என சொல்லும் நீங்கள் ஏன் எங்களுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுக்க மறுக்கிறீர்கள். உங்கள் ஆட்சி தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஆட்சி.இங்கு சில அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் ஒரு சில நேரங்களில் அமைதியாக இருந்தாலே போதும். பிரச்னைகள் வராது. 

மாதம் ஒருமுறை மின் கட்டணம் என சொன்னீங்களே, செய்தீர்களா?. நிறைய கிராமங்களில் பேருந்து வசதி இல்லை என சொன்னால் திமுகவினர் அனைவ்ரும் கொந்தளித்து விடுகிறார்கள். ஆனால் ஒரு பெண் மினி பஸ்ஸாவது விடுங்கள் என ஏன் கோரிக்கை விடுக்கிறார்கள். We Safe Model என சொல்கிறீர்கள். ஆனால் பெண்கள் We are not safe Model என சொல்லும் நிலையில் பெண்களின் பாதுகாப்பு உள்ளது.

மலைக்கிராமங்களில் பேருந்து, மருத்துவ வசதி இல்லாததால் வீட்டில் வைத்து பிரசவம் பார்க்கும் நிலை உள்ளது.  5 வருடம் பதில் சொல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்து வந்து விட்டார். ஆனால் இனி பதில் சொல்லி தான் ஆக வேண்டும். 

தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசிய விஜய்

  • சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும்
  • அரசு பள்ளிகள், கல்லூரிகள் தரமானதாக இருக்கும்
  • போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பள்ளி, கல்லூரி பாடங்கள் மாற்றியமைக்கப்படும். 
  • விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்களின் தேவைகள் அறிந்து காலத்திற்கேற்ப  திட்டங்கள் வகுக்கப்படும் என பல வாக்குறுதிகளை விஜய் அள்ளி வீசியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Embed widget