Chandrababu Naidu Decision : ’’NDA தான் ஆனால்..மக்கள் நலனுக்காக!’’சந்திரபாபு நாயுடு அதிரடி
பாஜகவுக்கு தனிபெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வரும் நேரத்தில்..தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறேன்
மக்கள் நலனுக்காக எந்த தியாகமும் செய்ய தயார் என தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பாஜக 240 தொகுதிகளிலும் காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.. எனினும் தனிபெரும்பான்மையாக ஆட்சி அமைக்க பாஜக விடம் போதிய இடங்கள் இல்லாததால் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது..
இந்நிலையில் பீகார் நிதீஷ் மற்றும் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவின் உதவியை நாடியுள்ளது பாஜக. NDA கூட்டணியை சேர்ந்த இந்த இருவர் கடுமையான மோடி எதிர்ப்பாளர்கள். சொந்த கூட்டணி என்றாலும் மோடி மீண்டும் பிரதமராக இவர்கள் ஒத்துழைப்பார்களா என்ற கேள்வி எழுந்து வருகிறது..
இந்த சமயத்தில் சரியாக காய் நகர்த்தினால் இண்டியா கூட்டணியினரும் கூட ஆட்சி அமைக்கலாம்…எனவே அவர்களும் நிதீஷ் மற்றும் சந்திரபாபுவை தொடர்பு கொண்டு ஆஃபர்களை அள்ளி விசி வருகின்றனர்.சபாநாயகர் பதவி மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து என பல ஆஃபர்களை இண்டியா கூட்டணி சந்திரபாபுவுக்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில் நிதீஷ் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் முடிவில் தான் பாஜக ஆட்சி அமைக்குமா இல்லையா என்பது தெரியும். பாஜக சார்பிலும் இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிரது..
இன்று எண்டிஏ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. அதில் சந்திரபாபு மற்றும் நிதிஷ் கலந்துகொள்கினறனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திர மக்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அரசியலில் ஏற்ற தாழ்வுகள் சகஜம். பல அரசியல் தலைவர்கள் மற்றும் வரலாற்றில் கட்சிகள் வெளியேற்றப்பட்டுவிட்டன, இது ஒரு வரலாற்றுத் தேர்தல். ஜெகன் மோகன் ஆட்சியில் மிக மோசமாக துன்புறுத்தப்பட்டுள்ளேன்.
மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்குறேன்..தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறேன்..பாஜக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன். NDA கூட்டணியின் ஒரு அங்கமாக இந்த வெற்றியை பெற்றுள்ளோம் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
சூசகமாக NDA கூட்டணியுடன் செல்வதாக அவர் முடிவு எடுத்துள்ளதாக கூறும் நிலையில், நிதிஷ் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.