மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Realme Book Slim: 47 ஆயிரம் ரூபாய் விலையில் ஒரு நல்ல லேப்டாப்.. ப்ளஸ், மைனஸ் என்ன?

ரியல்மீ நிறுவனம் தங்கள் முதல் லேப்டாப் Realme Book Slim தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால், பிற லேப்டாப்களிடம் இருந்து வேறுபட்டு நிற்கிறது.

ரியல்மீ நிறுவனம் தங்கள் முதல் லேப்டாப் Realme Book Slim தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால், பிற லேப்டாப்களிடம் இருந்து வேறுபட்டு நிற்கிறது. இதன் உள்ளடக்கத்திற்கு ஏற்ற விலையில் இந்த லேப்டாப் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 46,999 ரூபாய் முதல் விற்கப்படும் Realme Book Slim லேப்டாப் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. 

நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விலையில் எதிர்பார்ப்பதைவிட அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது Realme Book Slim லேப்டாப். இதன் metallic Blue colour finish நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விலையை விட அதிகமான மதிப்பு கொண்டது என்ற எண்ணத்தை அளிக்கிறது. இந்த லேப்டாப் அலுமினியம் அல்லாய் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால் உறுதியாக இருக்கிறது. எனினும், இதன் வெளிப்புற அம்சங்கள் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டியவையாக இருக்கின்றன. 

Realme Book Slim: 47 ஆயிரம் ரூபாய் விலையில் ஒரு நல்ல லேப்டாப்.. ப்ளஸ், மைனஸ் என்ன?

Realme Book Slim லேப்டாப் 14 இன்ச் அளவிலான IPS LCD திரையையும், அதில் 2160x1440 pixels ரிசொல்யூஷனையும் கொண்டிருக்கிறது. இதனால் இதில் நாம் பார்வையிடும் திரைப்படங்கள், டிவி ஷோ, கேம்ஸ் ஆகியவை மிக அழகாகவும், துல்லியமாகவும் தெரிகின்றன. மேலும் இதன் brightness அம்சமும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும், இவை மட்டுமே இந்த லேப்டாப்பின் சிறப்பு கிடையாது. இதன் 3:2 aspect ratio பிற லேப்டாப் டிஸ்ப்ளேக்களுடன் ஒப்பிடுகையில் உயரமாகக் காட்டுகிறது. இதனால் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவது மிக எளிதாக இருக்கிறது. எனினும், 16:9 aspect ratio ரிசொல்யூஷன் கொண்ட திரைப்படங்களைப் பார்க்கும் போது, காலி இடங்கள் அதிகமாகத் தோன்றுவது இதன் மைனஸ். 

Realme Book Slim லேப்டாப்பில் 11th Gen Intel Core i3 chipset பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 8GB RAM வசதியும், இதன் இண்டர்னல் ஸ்டோரேஜ் 128GB எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் RAM பல முக்கியமான பணிகளை ஒரே நேரத்தில் செய்வதற்குப் பயன்படும். உதாரணாமாக, ஒரே நேரத்தில் கூகுள் கிரோமில் நாம் 14 டேப்களைத் திறந்துகொள்ள முடியும். எனினும், கேம்ஸ் விளையாடுவதற்கு இந்த RAM அளவீடு சற்று குறைவாகவே இருக்கிறது. மேலும், 8GB RAM பல விதங்களில் போதும் என்ற உணர்வை அளித்தாலும், பல்வேறு செயலிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாது என்ற இதன் பலவீனத்தையும் நம்மிடம் காட்டுகிறது. 

Realme Book Slim: 47 ஆயிரம் ரூபாய் விலையில் ஒரு நல்ல லேப்டாப்.. ப்ளஸ், மைனஸ் என்ன?

இந்த லேப்டாப்பில் இருக்கும் கீ போர்ட் பிறவற்றில் இருந்து வித்தியாசமாகவும், பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் இருக்கிறது. கீ போர்டில் கொடுக்கப்பட்டிருக்கும் எழுத்துகளை அழுத்தும் போது, அவை 1.3 mm மட்டுமே உள்ளே செல்வதால், மிக வேகமாக டைபிங் செய்ய முடிகிறது. டிஸ்ப்ளேவில் அழகான வண்ணங்கள் தெரிவது போல, Realme Book Slim வழங்கும் ஸ்பீக்கர்களும் அதிக ஒலியை எழுப்புகின்றன. 

Realme Book Slim லேட்டாப்பில் மிகப்பெரிய மைனஸ் அதன் பேட்டரி. 9 மணி நேரங்கள் பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்த்தால், அது ஏமாற்றத்தையே தருகிறது. இதன் பேட்டரி சுமார் 5 முதல் 6 மணி நேரங்கள் பயன்படுகிறது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் 65W சார்ஜர் மூலம் 2 மணி நேரங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துகொள்ள முடியும். 

Realme Book Slim நிர்ணயிக்கப்பட்டிருக்கும் 46,999 ரூபாய் மிகக் குறைவான விலையில் அதிக அம்சங்களைத் தருவதாக அமைந்திருக்கிறது. சில அம்சங்களில் மாற்றங்கள் செய்திருக்கலாம் என்றாலும், அவற்றால் Realme Book Slim லேப்டாப்பின் சிறப்பு அம்சங்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:

வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?

கோயில் நிலத்தில் கிஷ்கிந்தா தீம் பார்க்?

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி

அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!

மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?

மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget