Vivo V50: அறிமுகமானது விவோ புதிய மாடல்! விலை எவ்வளவு? இதோ விவரம்!
Vivo V50: விவோ V50 ஸ்மாட்ஃபோன் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வருகிறது ஆகியவை பற்றி காணலாம்.

சீன ஸ்மாட்ஃபோன் நிறுவனமான Vivo V50 மாடல் இந்தியவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ V50 ஸ்மாட்ஃபோன் சிறப்புகள், விலை பற்றிய விவரங்கள் அறிவிகக்ப்பட்டுள்ளன.
பிரபல ஸ்மார்ட்ஃபோன் விற்பனை செய்யும் நிறுவனமான விவோ தனது புதிய மாடலான ’Vivo V50 ’-ஐ அறிமுகம் செய்ய இருக்கிறது. . Snapdragon 7 Gen 7 chipset, 80 வாட் விரைவு சார்ஜிங், 6,000mAh, பேட்டரி, 50MP கேமரா உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
விவோவின் புதிய மாடலான Vivo V50-ல் பல மாற்றங்கள் செய்யப்படுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. க்வாட் - க்கர்வ் டிஸ்ப்ளே, அதானது ஸ்க்ரீனின் நான்கு கார்னர்களிலும் சற்று வளைவாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இது டிஸ்ப்ளே தரத்தை அதிகரிக்கும். வீடியோ, கேமிங்க் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Vivo V40 மாடலில் dual-curved panel கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு, ஸ்மாட்ஃபோன் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு அதன் வடிவமைப்பும் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. l IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்டுள்ளது.
கேமராவின் சிறப்புகள் என்ன?
Vivo V50 மாடலிலும் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்படுள்ள மாடலில் இருப்பது போன்ற வடிவில் கேமரா இருக்கும். இதில் புதிதாக Zeiss என்ற சாஃப்வேருடன் கேமரா டெவலப் செய்யப்பட்டுள்ளது. மூன்று கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 50MP சென்சார் உடன் வருகிறது. ப்ரைமரி கேமரா, அல்ட்ராவைட் லென்ஸ், செல்ஃபி கேமரா என தரம் வாய்ந்த புகைப்படங்களை எடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Vivo's Aura Light, குறைந்த ஒளியிலும் தெளிவாக புகைப்படம் எடுக்க உள்ளிட்ட பல கேமரா வசதிகளை கொண்டுள்ளது. இந்தியாவில் திருமணங்களின் முக்கியத்தியத்துவத்தை உணர்ந்தும் அதன் கொண்டாட்டங்களை ஃபோட்டோ எடுக்க உதவியாக திருமண ஸ்டைல் போட்ரெட் மோட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுல் இந்திய திருமணங்களில் இருக்கும் சூழல்போல லைட்டிங் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#vivoV50 #ZEISSPortraitSoPro https://t.co/ZgJogQ1m7S
— vivo India (@Vivo_India) February 17, 2025
50MP செல்ஃபி கேமராவில் Vivo's AI Facial Contouring தொழில்நுட்பம் கொடுகக்ப்பட்டுள்ளது. இது செல்ஃபி புகைப்படங்கள் எடுக்க உதவும்.
- டிஸ்ப்ளே 6.7-இன்ச் quad-curved AMOLED, 120Hz ரெஃப்ரஷ் ரேட்
- ப்ராசசர்- Qualcomm Snapdragon 7 Gen 3
- ரியர் கேமரா -50MP ப்ரைமரி + 50MP அல்ட்ராவைடு
- செல்ஃபி கேமரா - 50MP
- OS - Android 15-based FunTouchOS 15
- Protection: IP68 + IP69
பேட்டரி திறன்:
Vivo V50 மாடலில் 6,000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. விவோவின் சமீபத்திய Funtouch OS 15 சாஃப்ட்வேர் உடன், ஏ.ஐ. வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளதாம். பேட்டரி சார்ஜிங் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவரவில்லை. Qualcomm’s Snapdragon 7 Gen 3 SoC என்று சொல்லப்பட்டுள்ளது. 90W சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.
Vivo V50 விலை விவரம்:
- 8GB RAM + 128GB ஸ்டோரேஜ்: ரூ.34,999/-
- 8GB RAM + 256GB ஸ்டோரேஜ்: ரூ.36,999/-
- 12GB RAM + 512GB ஸ்டோரேஜ்: ரூ.40,999/-
Vivo V50 பிப்ரவரி 25-ம் தேதி முதல் விற்பனையாக இருக்கிறது. ’Rose Red’, ’Starry Blue’, ’Titanium Grey’ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

