அலுவலக சூழல் ஆரோக்கியமாக இருக்க டிப்ஸ்!

Published by: ஜான்சி ராணி

ஒரு தொழில் நல்ல முறையில் வெற்றி பெறு வதற்கு முதன்மையான காரணம் வாடிக்கையாளர்கள் தான். அதேசமயம், தரமான வாடிக்கையாளர் சேவையை வழங்கும் அலுவலக ஊழியர்களும் முக்கியமானவர்கள்.

உங்கள் அலுவலக ஊழியர்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு நிறுவனத்தின் வளர்ச்சியும் உற்பத்தி திறனும் அதிகரிக்கும்.

ஊழியர்களின் மனநிறைவு,நிறு வனத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரியும் என்பதை பெண் தொழில்முனைவோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பணியாளர்கள் வேலையில் முழுமனதுடன் ஈடுபட, அத்தகைய சூழலை அலுவலகத்தில் உருவாக்க வேண்டியது அவசியமாகும்.

வேலையைப் பற்றிய அறிவு, திறமை ஆகியவற்றை மட்டும் கவனிக்காமல், அந்த ஊழியருக்கு நீங்கள் கொடுக்கும் வேலை பிடித்திருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.

புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கும்போது, ஒருவரிடம் அனுபவம் இருக்கிறதா என்பதை மட்டும் பார்க்காமல் திறமையும், அர்ப்பணிப்புத் தன்மையும் இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.

தொழிலில் வெளிப்படைத்தன்மை என்பது மிகவும் அவசியம். உங்கள் அலுவலகத்தில் பணி யாற்றும் பணியாளர்களிடம் நீங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வது முக்கியமானது.

ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து வேலை செய்யும் இயந்திரங்கள் அல்ல. ஓய்வு தேவைப்படும். அத்தகைய நேரத்தில் அவர்களின் மனநிலையைப் பொறுத்து, அவர்களுக்கு வேண்டிய வழிவகைகளை செய்து கொடுங்கள்.

சிறு சிறு முயற்சிகளாக இருந்தாலும் ஊழியர்களைப் பாராட்ட மறக்காதீர்கள்.