Raina's viral video: “நானும் பிராமணன் தான்” - சர்ச்சையை கிளப்பிய ரெய்னாவின் கமெண்ட்!
ரெய்னாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளத்தில் எதிர்மறை கருத்துகள் வரத் தொடங்கியது. இன்னொரு புறம், ரெய்னாவுக்கு ஆதராகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அளவில் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் ஐ.பி.எல். போட்டி மிகவும் பிரபலம். இந்த போட்டித்தொடரில் பல இந்திய வீரர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். இதைப்போலவே, தமிழக அளவில் டி.என்.பி.எல். என்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் நடத்தப்பப்பட்டு வருகிறது.
2016ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த தொடர், கடந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான டி.என்.பி.எல். போட்டித் தொடர் ஜூலை 19-ந் தேதி நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் 5வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான முதல் போட்டி நடைபெற்றது.
முதல் போட்டியில் கோவை கிங்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியின்போது முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பங் கிங்ஸ் அணி வீரருமான ரெய்னா காணொளி காட்சி மூலம் வர்ணணையாளரிடம் பேசினார்.
Did #SureshRaina just say ‘Am also a Brahmin’ on national telivision..😂😂
— The Illusionist (@JamesKL95) July 19, 2021
Chennai culture... hmmm#TNPL2021 pic.twitter.com/zKa2nwoeIs
அப்போது, ரெய்னாவிடம் “தென்னிந்திய கலாச்சாரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரெய்னா, “நானும் பிராமணன் தான். கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து இங்கு விளையாடி வருகின்றேன். இந்த கலாச்சாரத்தையும், என்னோடு விளையாடும் சக வீரர்கள் மீதும் அன்பு வைத்திருக்கின்றேன்.” என தெரிவித்தார்.
ரெய்னாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளத்தில் எதிர்மறை கருத்துகள் வரத் தொடங்கியது. இன்னொரு புறம், ரெய்னாவுக்கு ஆதராகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
@ImRaina you should be ashamed yourself.
— Suresh (@suresh010690) July 19, 2021
It seems that you have never experienced real Chennai culture though you have been playing many years for Chennai team. https://t.co/ZICLRr0ZLh
இந்நிலையில், டி.என்.பி.எல் தொடரில் சேலம் ஸ்பார்டன்ஸ், சேப்பாக் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளனர். முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் சேலம் ஸ்பார்டன்ஸ் என்ற பெயரில் இந்த தொடரில் களமிறங்க உள்ளது.





















