Natarajan Viral Video: ‛வந்துட்டேனு சொல்லு... சும்மா ஸ்டைலா... கெத்தா... வந்துட்டேனு சொல்லு- வீடியோ வெளியிட்ட நடராஜன்!
இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”I’m coming back. Write it down in BOLD letters.” என பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போது ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம் செய்யப்பட்டது. ரசிகர்கள் இன்றி பாதுகாப்பான பயோ பபிள் சூழலில் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், பூட்டிய மைதானத்திற்கு உள்ளேயும் கொரோன நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதே போட்டிகள் நிறுத்தப்பட காரணமாக அமைந்தது. இதனால், இந்தியாவில் நடைபெற இருந்த மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இருப்பதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்தத் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான நடராஜன், முதல் இரண்டு போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பிறகு நடைபெற்ற ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. லேசான காயத்தால் அவர் விளையாடவில்லை என்று அணி நிர்வாகம் தெரிவித்தது.
Today, I underwent knee surgery- and am grateful for the expertise, attention and kindness of the medical team, surgeons, doctors, nurses and staff. I’m grateful to @bcci and to all that have wished well for me. pic.twitter.com/Z6pmqzfaFj
— Natarajan (@Natarajan_91) April 27, 2021
அதன் பின்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நடராஜன், தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்தார். அப்போது, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பதிவிட்டு வந்தார். அந்த வரிசையில், இன்று அவர் வெளிடிட்டுள்ள பதிவில், ”I’m coming back. Write it down in BOLD letters.” என பதிவிட்டுள்ளார்.
I’m coming back. Write it down in BOLD letters. #ComingBackStrongerThanEver pic.twitter.com/V4DbQC8vS0
— Natarajan (@Natarajan_91) July 20, 2021
ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரும் தற்போது செப்டம்பர் மாதம் மீண்டும் துவங்க உள்ள நிலையில், ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை நடைபெறும் நேரத்தில் நடராஜன் மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால், நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றார். அது நெட் பவுலராக. ஆனால், சில வீரர்களின் காயத்தால், அவருக்கு T20, ஒருநாள் மற்றும் டி20 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டார் நடராஜன். மேலும், ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அறிமுகமான ஒரே வீரர் என்ற சாதனையையும் நடராஜன் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






















