Tamil Thalaivas vs Bengal Warriors: கடைசி ஆட்டத்தில் அசத்திய தமிழ் தலைவாஸ்! 37 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி!
ப்ரோ கபடி லீக் போட்டியில் தங்களின் கடைசி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
LIVE
Background
ப்ரோ கபடி லீக்:
ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. மொத்தம் 12 அணிகள் களமிறங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதன் அடிப்படையில் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பினை இழந்த அணிகளில் ஒன்றாக உள்ள அணி தமிழ் தலைவாஸ். தமிழ் தலைவாஸ் அணி இன்று அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி தனது கடைசி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கும் இதுவே சீசனின் கடைசி ஆட்டமாகும். தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடிய 21 போட்டிகளில் 13 தோல்விகளை சந்தித்தும் எட்டு போட்டிகளில் வெற்றியும் பெற்று புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது தமிழ் தலைவாஸ். இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இந்த இரு அணிகளும் ப்ரோ கபடி லீக்கில் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பெங்கால் வாரியர்ஸ் அணி 10 முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு எட்டப்படாமல் முடிந்தது. கடைசி மூன்று போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி ஒரு போட்டியிலும் பெங்கால் வாரியர்ஸ் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சீசனின் தொடக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் வெற்றி பெற்றது.
வெற்றியுடன் முடிக்க போவது யார்?
அந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் 48 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் 38 புள்ளிகளும் எடுத்தது. இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டன் மனிந்தர் சிங் மட்டும் 16 புள்ளிகள் சேர்த்தார். ஷுபம் ஷிண்டே 11 புள்ளிகளும் நிதின் குமார் 7 புள்ளிகளும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். அதேபோல் 9-வது சீசனில் கடைசியாக மோதிய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு தமிழ் தலைவாஸ் அணியில் தவிர்க்க முடியாத வீரர்களாக உள்ள கோர் டீம் எனப்படும், நரேந்தர், அஜிங்கியா பவார் மற்றும் சாகர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இந்த போட்டி சீசனின் கடைசி போட்டி என்பதால் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி வெற்றியுடன் முடிக்க தீவிரமாக உள்ளன.
மேலும் படிக்க: IND VS ENG 3rd Test : 434 ரன்கள் வித்தியாசம்! இங்கிலாந்தை வாரி சுருட்டி வீசிய இந்தியா! மிரட்டல் வெற்றி!
மேலும் படிக்க: Ravichandran Ashwin: ராஜ்கோட் டெஸ்டில் கம்பேக் கொடுத்து அசத்திய அஸ்வின்!
Tamil Thalaivas vs Bengal Warriors: பெங்கால் வாரியர்ஸ் அணியை ஓட விட்ட தமிழ் தலைவாஸ்! கடைசி போட்டியில் அசத்தல் வெற்றி!
இந்த சீசனில் தங்களது கடைசி போட்டியில் விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 74 புள்ளிகளை பெற்று அசத்தியது. இதன் மூலம் 74-37 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
Tamil Thalaivas vs Bengal Warriors: வரலாறு படைத்த தமிழ் தலைவாஸ் அணி!
ப்ரோ கபடி லீக் தொடரில் 70 புள்ளிகளை பெற்று அதிக புள்ளிகளை பெற்ற அணி என்ற சாதனையை தமிழ் தலைவாஸ் அணி படைத்து இருக்கிறது.
Tamil Thalaivas vs Bengal Warriors: மோசமான வரலாறு படைத்த பெங்கால் வாரியர்ஸ்!
ப்ரோ கபடி லீக் தொடரில் ஒரு போட்டியில் 6 முறை ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை படைத்து இருக்கிறது பெங்கால் வாரியர்ஸ்.
Tamil Thalaivas vs Bengal Warriors: 60 புள்ளிகளை கடந்த தமிழ் தலைவாஸ் அணி!
தமிழ் தலைவாஸ் அணி 60 புள்ளிகளை கடந்து விளையாடி வருகிறது.
Tamil Thalaivas vs Bengal Warriors: முதல் ரெய்டு...முதல் புள்ளியை பெற்றுகொடுத்த மாசானமுத்து!
மாசானமுத்து தன்னுடைய முதல் ரெய்டில் முதல் புள்ளியை பெற்றுகொடுத்துள்ளார்.