PM Narendra Modi: உலகக் கோப்பை இறுதிப்போட்டி! மைதானத்திற்கு வந்து நேரடியாக பார்க்கும் பிரதமர் மோடி!
குஜராத்தில் உள்ள அலகாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை நேரடியாக பார்க்கும் பிரதம் மோடி.
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (நவம்பர் 19) நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இதை பிரதம் நரேந்திர மோடி நேரில் கண்டுகளித்து வருகிறார்.
இறுதிப் போட்டி:
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினார்கள்.
இதில், இந்திய அணியின் கேப்டன் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினார். 31 பந்துகள் களத்தில் நின்ற அவர் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என மொத்தம் 47 ரன்கள் குவித்தார். அதேபோல், விராட் கோலியும் 54 ரன்கள் எடுக்க அடுத்து வந்த ஸ்ரேயாஸ் உடனே விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் , வந்த கே.எல்.ராகுல் 107 பந்துகள் களத்தில் நின்று 66 ரன்கள் எடுக்க அடுத்து வந்த வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் குவித்தது.
பிரதமர் மோடி வருகை:
தற்போது அலகாபாத் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியை திரைபிரபலங்களான ஷாருக்கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா ஆகியோரும் சச்சின் டெண்டுல்கர், சத்குரு உள்ளிட்டோரும் நேரில் பார்த்து வருகின்றனர்.
இச்சூழலில், இறுதி போட்டி பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வருவதால் இந்த போட்டியை பிரதமர் நேரில் கண்டுகளிப்பார் என்ற தகவல்கள் நேற்று முதல் வெளியானது.
இச்சூழலில், தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இறுதிப் போட்டியை மைதானத்தில் நேரடியாக சென்று காண்பதற்கா பிரதமர் மோடி அலகாபாத் வந்தார். முன்னதாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் அலகாபாத் வந்த பிரதமர் மோடி தற்போது மைதானத்தில் நேரடியாக போட்டியை கண்டுகளித்து வருகிறார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிப் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: IND vs AUS Final Score LIVE: பந்து வீச்சாளர்கள் கையில் போட்டி; இலக்கைத் துரத்த களமிறங்கியது ஆஸ்திரேலியா
மேலும் படிக்க: Rohit Sharma: உலகக் கோப்பையில் 5-வது முறை! இறுதிப்போட்டியில் அரைசதத்தை தவறவிட்ட ரோகித் சர்மா - முழு விவரம்