மேலும் அறிய

Sam Curran: "அன்று கம்மின்ஸ், இன்று நான்" மீண்டும் ஒரு 'சைலண்ட்' சவால்! அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்!

இங்கிலாந்து வீரர் சாம் கரன், "வியாழக்கிழமை இரவு வான்கடே மைதானம் மிகவும் அமைதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" எனக் கூறியிருப்பது, இந்திய ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, அகமதாபாத் மைதானத்தில் கூடியிருந்த ஒரு லட்சம் இந்திய ரசிகர்களை நோக்கி, "மைதானத்தில் இருக்கும் கூட்டத்தை அமைதிப்படுத்துவதை விட சிறந்த திருப்தி வேறு எதுவுமில்லை" என்று ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறினார். அதேபோல அவர் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றார்.

தற்போது அதே பாணியில் இங்கிலாந்து வீரர் சாம் கரன், "வியாழக்கிழமை இரவு வான்கடே மைதானம் மிகவும் அமைதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" எனக் கூறியிருப்பது, இந்திய ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாம் கரன் சொன்னது என்ன?

போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய சாம் கரன், "இது ஒரு அற்புதமான மற்றும் ஐகானிக் மைதானம். வியாழக்கிழமை இரவு இங்கு மிகவும் அமைதியாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஒரு இளம் கிரிக்கெட் வீரராக, இந்தியாவுக்கு எதிராக உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாட வேண்டும் என்று நீங்கள் கனவு காண்கிறீர்கள். இங்குள்ள விக்கெட் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றதாக இருக்கும். இது ஒரு சிறிய மைதானம், எனவே அதிக ஸ்கோரிங் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

பாட் கம்மின்ஸ் சம்பவம்:

2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் இதேபோன்ற அறிக்கையை வெளியிட்டார். மைதானத்தில் கூட்டத்தை அமைதிப்படுத்துவதாக கம்மின்ஸ் கூறினார். அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். 

2022 டி20 உலகக் கோப்பை: 

2022 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியிலும் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. அந்தப் போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 2024 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி20 உலகக்கோப்பையில் இரு அணிகளும் அரையிறுதியில் மோதின, அந்தப்போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. தற்போது மூன்றாவது முறையாக  இரு அணிகளும் அரையிறுதியில் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Entry Level Cars: எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Embed widget