Shimron Hetmyer IPL 2024: கிளீன் போல்ட், ஸ்டம்பை அடித்து உடைத்த ராஜஸ்தான் வீரர் ஹெட்மயர் - பிசிசிஐ அதிரடி முடிவு
Shimron Hetmyer IPL 2024: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில் விதிகளை மீறியதாக, ராஜஸ்தான் வீரர் ஷிம்ரோன் ஹெட்மயருக்கு, பிசிசிஐ நிர்வாகம் அபாரதம் விதித்துள்ளது.
Shimron Hetmyer IPL 2024: ராஜஸ்தான் வீரர் ஷிம்ரோன் ஹெட்மயர், ஸ்டம்பை பேட்டால் அடித்த செயலுக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.
ஸ்டம்பை பேட்டால் அடித்த ஹெட்மயர்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில், ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 175 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஷ்வால் அதிரடியான அடித்தளம் அமைத்து கொடுத்தார். அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 92 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணியை, இம்பேக்ப் பிளேயராக களமிறங்கிய ஹெட்மயர் கரை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அபிஷேக் சர்மா பந்துவீச்சில் கிளீன் போல்டாகி, வெறும் ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் ஆவேசமான ஹெட்மயர், தனது பேட்டால் ஸ்டம்பை ஓங்கி அடித்தார். இதனால் ஸ்டம்ப் கீழே விழுந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
13.4
— Misran Ahmad 🏏Shahzadain 🇵🇰 (@MisranAhmad19) May 24, 2024
W
Abhishek Sharma to Hetmyer, out Bowled!! Hetmyer b Abhishek Sharma 4(10) pic.twitter.com/Y2pcpbeo8K
ஹெட்மயருக்கு அபராதம்:
இந்நிலையில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ஹெட்மயருக்கு, ஒரு போட்டிக்கான ஊதியத்தில் 10 சதவிகிதம் அபராதமாக விதிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியின் நடுவருமான ஜவகல் ஸ்ரீநாத் இந்த தடையை விதித்தார். இதுதொடர்பான அறிவிப்பில், "ஐபிஎல் நடத்தை விதி 2.2 இன் கீழ் ஹெட்மியர் லெவல் 1 குற்றத்தைச் செய்தார். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் போட்டி நடுவரின் அனுமதியை ஏற்றுக்கொண்டார். லெவல் 1 நடத்தை விதிகளை மீறினால், போட்டி நடுவரின் முடிவே இறுதியானது" என்று தெரிவித்துள்ளார்.